போதைப் பொருள் கும்பலை எதிர்த்த நபர் சுட்டுக்கொலை; வைரலாகும் காணொளி

0
426
Man Shot Dead Allegedly Drug Mafia Delhi Murder

டெல்லியில் போதைப்பொருள் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்த நபரை நடுவீதியில் மாபியா கும்பல் சுட்டுக் கொலை செய்த காணொளி வைரலாகியுள்ளது. (Man Shot Dead Allegedly Drug Mafia Delhi Murder)

டெல்லியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்பவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கானோர் போதைப்பொருளை வாங்கி வருகின்றனர்.

தென்கிழக்கு டெல்லியின் தைமூர் நகரில் ஒரு நாளைக்கு 25 இலட்சம் ரூபா முதல் 30 இலட்சம் ரூபா வரை போதைப்பொருள் விற்பனையாகின்றது. இந்த விற்பனை நடவடிக்கைகளுக்கு பொலிஸாரும் உடந்தையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், போதைப்பொருளுக்கு எதிராகப் போராடிவரும் இந்த பகுதியை சேர்ந்த ரூபேஷ் குமார் என்பவர் மாபியா கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட காணொளி வெளியாகி வைரலாகி வருகின்றது.

இந்த காணொளியில் ரூபேஷ் வீதியில் இருக்கும் போது அவரை 2 பேர் கடந்து செல்கின்றனர். அவர்களில் ஒருவன் துப்பாக்கியால் அவரை நோக்கி சுட்டுவிட்டு நடந்து செல்கிறான். இதில் ரூபேஷ் வீதியில் சரிந்து விழுகிறார்.

அவர்கள் இருவரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்கும் மாபியா கும்பலுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படுகின்றது.

இதுகுறித்து ரூபேஷின் சகோதரர் உமேஷ் குமார் தெரிவிக்கையில், நாங்கள் போதைப்பொருள் கும்பலுக்கு எதிராக செயற்பட்டோம். பொலிஸ் உயரதிகாரிகளுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். தொலைபேசி வழியே அவர்களிடம் பேசியுள்ளேன். மூத்த அதிகாரி ஒருவரை நேரிலும் சந்தித்தேன்.

அவர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. எனது சகோதரர் கொல்லப்பட்டுள்ளார். நாளை நானும் கொல்லப்படலாம். ஆனால் மற்றவர்களைக் காக்கும் முயற்சியை நான் நிறுத்தமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் குதித்தனர். இதில் 2 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

பொலிஸ் அதிகாரிகள் மீது கற்கள் வீசப்பட்டதில் பலர் காயமடைந்தனர். அவர்கள் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்த காணொளி வெளியாகியுள்ளது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Man Shot Dead Allegedly Drug Mafia Delhi Murder