நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளூராட்சி மன்றங்கள் ஒழுங்குபடுத்த முடியாது! மாவை கருத்து!

0
587

நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளுராட்சி மன்றங்கள் பொறுப்பேற்பது பொருத்தமானது அல்ல என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். Jaffna Parliament Member Mavai Senathirajah Sri Lanka Tamil News

முன்னாள் மூத்த போராளி மு.மனோகர் (காக்கா அண்ணா) நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாவையின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் தியாகி திலீபன் நினைவு நாள் தொடர்பாக ஏற்பட்டுள்ள குழப்பநிலைமை தொடர்பாக சுட்டிக்காட்டியபோதே அவர் தமது நிலைப்பாட்டை இவ்வாறு வெளிப்படுத்தினார்.

சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தாங்கள் இந்த விடயத்தை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென முன்னாள் மூத்த போராளி மு.மனோகர் விடுத்த வேண்டுகோளையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

திலீபன் நினைவு நாளுக்கு தடைவிதிக்கக் கோரி பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருப்பதாகவும், அதற்கெதிராக சுமந்திரன் வாதாட இருப்பதாகவும் வெளிவந்த செய்திகளின் பின்னணியில் நல்ல நாடகம் அரங்கேறுகிறது என முன்னாள் மூத்த போராளி மு.மனோகர் முன்வைத்த குற்றச்சாட்டை மாவை சேனாதிராஜா இதன்போது நிராகரித்திருந்தார்.

எப்படியிருந்தாலும் கடந்த வருடம் இதே இடத்தில் களியாட்டமாக நடைபெற்ற ஒரு நிகழ்வில் பங்கேற்றவரின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வை நடத்துவது பொருத்தமற்றது என முன்னாள் மூத்த போராளி மு.மனோகர் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் அன்றைய நினைவு நிகழ்வின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் மாவை கேட்டபோது அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் முன்னாள் மூத்த போராளி மு.மனோகர் பதிலளித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு அவசியம்

காணாமல்போன தந்தையும், மகளும் சடலங்களாக மீட்பு!

கொலை அச்சுறுத்தலுக்கு பயந்து ஜனாதிபதியிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தபாய

ஜனாதிபதி அமெரிக்கா பயணமானார்

தமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருது!

ஆவா குழுவை இரண்டே நாட்களில் அழிப்போம்! மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி!

பாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானம்!

Tamil News Live

Tamil News Group websites