ஞானசாரவை விடுதலை செய்ய ஜனாதிபதி கவனம் செலுத்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும் – பொதுபல சேனா

0
441
TAMIL NEWS President not pay attention freedom struggle erupt BBS

(TAMIL NEWS President not pay attention freedom struggle erupt BBS)

பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூடிய கவனம் செலுத்தாவிட்டால் அனைத்து பௌத்த பிக்குகளையும் இணைத்துக் கொண்டு வீதியில் இறங்கி போராட்டம் நடத்தவுள்ளதாக அமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார்.

ராஜகிரியவில் உள்ள அமைச்சின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பேச்சாளர் கலங்கம சுதினாநந்த தேரர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்த படையினருக்கு ஆதரவாக குரல் கொடுத்த போதே ஞானசார தேரர் ஹோமாகம நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சட்டம் அவருக்கு 6 வருட கடூழிய சிறைத் தண்டனையை வழங்கிய போதும், ஜனாதிபதியின் அதிகாரத்தைக் கொண்டு பொது மன்னிப்பு வழங்க முடியும்.

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை பெற்றுக் கொடுக்கும் வரை நாட்டிலுள்ள அனைத்து பௌத்த மத குருமார்களும் அழுத்தங்களை பிரயோகிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“ஞானசாரவின் விடுதலைக்காக நாங்கள் நியாயமான முறைகளையே கையாள்வோம். நியாயமான போராட்டங்களையே நடத்துவோம். இந்தவிடயம் தொடர்பில் நாம் ஜனாதிபதியைச் சந்தித்து எமது கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளோம். ஜனாதிபதியும் பாராளுமன்றத்திலுள்ள ஏனைய அமைச்சர்களைப் போன்று ஞானசாரவின் விடுதலை தொடர்பாக அக்கறை செலுத்தாத பட்சத்தில் அனைவரின் கவனத்தையும் திசைதிரும்பும் வகையில் பாரிய போராட்டத்தை மேற்கொள்வோம்” என்று அவர் தெரிவித்தார்.

(TAMIL NEWS President not pay attention freedom struggle erupt BBS)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites