எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு இந்தியா செல்வதற்கான விசா மறுப்பு

0
470
India denies visa m.k.Sivajilingam

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு இந்தியா செல்வதற்கான விசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. (India denies visa m.k.Sivajilingam)

இந்தியாவில் இன்றைய தினம் நடைபெறவுள்ள அரசியல் சார் பயிற்சி நெறியில் கலந்துகொள்ளச் செல்லும் அரசியல் குழுவில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவு செய்யப்பட்டார்.

எனினும் அவருக்கான விசா அனுமதியை வழங்க இந்தியா மறுத்துள்ளதுடன், கடந்த காலங்களில் இந்திய அரசாங்கம் தொடர்ச்சியாக அவருக்கான விசாவை மறுத்து வந்த நிலையிலேயே இம்முறையும் விசா நுழைவுச்சீட்டு மறுக்கப்பட்டுள்ளது.

‘ஆசியா பவுண்டேஷன்’ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இலங்கை மாகாணசபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு இந்தியாவில் 3 கட்டங்களாக இடம்பெற்று வருகின்ற நிலையில், இதில் கலந்துகொள்ள சிவாஜிலிங்கத்துக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது.

எனினும் ஏனையவர்கள் இந்தியா சென்றுள்ள போதிலும், எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கான விசாவை இந்தியா வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; India denies visa m.k.Sivajilingam