டளஸ் அழகப்பெருமவின் வயிற்றோட்டம் குறித்து முஜிபுர் ரஹ்மானின் நகைச்சுவை விளக்கம்

0
372
TAMIL NEWS dalas alagapperuma diariah mujibur rahman comedy

(TAMIL NEWS dalas alagapperuma diariah mujibur rahman comedy)

பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவுக்கு பால் அருந்தியதால் வயிற்றோட்டம் ஏற்பட்டவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.

மாறாக மக்கள் சக்தி ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த மக்களை கண்டதாலேயே அவருக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டிருப்பதாக அவர் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

நட்சத்திர உணவகங்களில் உணவருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும, வீதியில் இறங்கி பால் பக்கெற்றை அருந்துவார் என நினைக்கவில்லை.

பொது எதிரணியின் ஆர்ப்பாட்ட பேரணியின் போது வழங்கப்பட்ட பால் பக்கெற் தொடர்பில் நாட்டில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதால், இது குறித்து விவாதம் ஒன்றுக்கு வருமாறு கூட்டு எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுப்பதாகவும் இந்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடத்தப்படுவது முக்கியமானது எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் நடத்திய மக்கள் சக்தி ஆர்ப்பாட்ட பேரணியின் போது சிலர் வழங்கிய பால் பக்கெற்றை பருகியதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும, மூன்று நாட்கள் சுகவீனமுற்றிருந்தாக கூறியிருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே முஜிபுர் ரஹ்மான் இதனை குறிப்பிட்டுள்ளார்.

(TAMIL NEWS dalas alagapperuma diariah mujibur rahman comedy)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites