Categories: NEWSTop Story

வீடு­கள் அமைப்­ப­தில் நீடித்த இழு­ பறி முடி­வு!

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் வீடு­கள் அமைப்­ப­தில் நீடித்த இழு­ பறி நேற்று முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. இரு­வேறு திட்­டங்­க­ளின் ஊடாக வடக்கு, கிழக்­கில் 65 ஆயி­ரம் வீடு ­களை அமைக்­கும் பணி­கள் இரு வாரங்­க­ளில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. Indian Housing Scheme Problem Solved

25 ஆயி­ரம் வீடு­களை அமைக்­கும் திட்­டம், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­ மை­யி­லான குழு­வால் நேர­டி­யா­கக் கையா­ளப்­ப­ட­வுள்­ளது. அதே­வேளை 40 ஆயி­ரம் வீடு­களை இந்­தி­யாவா? சீனாவா அமைப்­பது என்ற சர்ச்சை முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. வீடு­களை அமைக்­கும் பணி­களை இந்­தி­யா­வி­டம் ஒப்­ப­டைக்­க­வும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யில் கொழும்­பில் நேற்று மாலை 5 மணிக்கு உயர்­மட்­டக் கூட்­டம் இடம்­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­தில் அமைச்­சர்­க­ளான மனோ­க­ணே­சன், சுவா­மி­நா­தன், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆகி­யோர் பங்­கேற்­ற­னர்.

வடக்கு, கிழக்­கில் வீட­மைப்பு பணி­களை முன்­னெ­டுப்­ப­தில் தொடர்ந்­தும் இழு­பறி நிலை நீடித்து வரு­கின்­றது. 25 ஆயி­ரம் கல் வீடு­களை அமைப்­ப­ தற்­கான ஒப்­பந்­த­கா­ரர்­க­ளைத் தெரிவு செய்த பின்­ன­ரும், எந்த அமைச்சு ஊடாக அந்­தத் திட்­டத்தை முன்­னெ­டுப்­பது என்­ப­தில் இழு­ப­றி­யி­ருந்­தது. இது தொடர்­பில் நேற்­றைய உயர் மட்­டக் கூட்­டத்­தில் நீண்ட நேரம் விலா­வா­ரி­யாக ஆரா­யப்­பட்­டது.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­ மை­யில் ஒரு குழு அமைப்­பது என்­றும் அந்­தக் குழு இந்த வீட்­டுத் திட்­டத்தை முன்­னெ­டுப்­பது என்­றும் முடிவு எட்­டப்­பட்­டது. வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்­திக்­கான அரச தலை­வர் சிறப்­புச் செய­ல­ணி­யின் செய­லர் வே.சிவ­ஞா­ன­சோதி, இந்­தக் குழு­வின் நிறை­வேற்­றுப் பொறுப்­பா­ள­ராக இருப்­பார் என்­றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தக் குழு­வில், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமைச்­சர்­க­ளான மனோ­க­ணே­சன், சுவா­மி­நா­தன், இரு அமைச்­சுக்­க­ளி­ன­தும் செய­லர்­கள், தலைமை அமைச்­ச­ரின் ஆலோ­ச­கர் பாஸ்­க­ர­லிங்­கம், வே.சிவ­ஞா­ன­சோதி மற்­றும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பிர­திதி ஒரு­வ­ரும் உள்­ள­டங்­கு­வார்­கள்.

நிதிக் கையா­ளுகை விட­யம் அமைச்­சர் மனோ­க­ணே­ச­னின் செய­லரே மேற்­கொள்­வார். அது பெய­ர­ள­வி­லா­ன­தா­கவே இருக்­கும். தலைமை அமைச்­சர் தலை­மை­யி­லான குழு­வின் முடி­வுக்கு அமை­வா­கவே வீடு­கள் அமைக்­கும் பணி வடக்கு, ,கிழக்­கில் முன்­னெக்­கப்­ப­டும்.
இந்த மாதம் மூன்­றா­வது வாரத்­தில் வீட்­டுத் திட்­டம் ஆரம்­பிப்­ப­தற்­கான அடிக்­கல் நடப்­ப­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Editor

Share
Published by
Editor
Tags: Indian Housing Scheme Problem SolvedLankaSri Lanka Tamil NewsTamil News

Recent Posts

திருமுருகன் காந்தியின் உயிருக்கு ஆபத்து

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது. (thirumurugan gandhi health worsen may 17 movement)…

3 mins ago

2ம் உலகப்போரின் போது நாஸி படையினர் பயன்படுத்திய சுரங்கம் கண்டுபிடிப்பு

ஜேர்மனியில் 2ம் உலகப் போரின் போது நாஸி படையினர் பயன்படுத்திய சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. exploration mine Tunnel used Nazi soldiers during World ஜெர்மனியின் ஒதுக்குப்புற…

12 mins ago

“நடிகை ரம்பாவிற்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளது ” : சந்தோஷத்தில் குடும்பத்தினர்

தமிழில் பல முன்னணி நட்சத்திரங்களில் பல வெற்றி படங்களை தந்த நடிகை ரம்பா அவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது நடிகை ரம்பா  கனடாவைச் சேர்ந்த தொழிலதிபரான இந்திரன் பத்மநாதனை…

18 mins ago

திகன விமான நிலையத்தின் நிர்மாணிப்பணிகள் தொடர்பில் புதிய குழு நியமனம்!

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் 137 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட திகன உள்ளூர் விமான நிலையத்தின் நிர்மாணிப்பணிகள் சூழல் பாதுகாப்பு அமைப்புக்கள் உள்ளிட்ட பல அமைப்புக்களின் எதிர்ப்புக்கள்…

43 mins ago

வயிற்றுப்பகுதியை முழுவதுமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்கு முன் துபாய் வாலிபர் செய்த செயல்

துபாயை சேர்ந்த வாலிபர் குலாம் அப்பாஸ் வயிற்றில் புற்று நோய் இருந்தது. இதற்காக அவர் துபாயில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் புற்றுநோயின் தாக்கம்…

1 hour ago

7 பேர் விடுதலை; தமிழக ஆளுநரை அற்புதம்மாள் சந்திப்பு

தமிழக ஆளுநரை பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் இன்றைய தினம் நேரில் சென்று சந்தித்துள்ளார். (perarivalan mother arputhammal meet tamilnadu governor) அப்போது 7 பேரை விடுவிக்கும்…

1 hour ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.