“அர­சி­யல் தீர்­வுக்­குப் பின்­னரே அபி­வி­ருத்தி என்று நாம் நினைத்­தி­ருந்தால் தேர்­த­லில் போட்­டி­யிட்­டி­ருக்க மாட்­டோம்”

0
411
Sumanthiran Political Solution

அர­சி­யல் தீர்­வுக்­குப் பின்­னரே அபி­வி­ருத்தி என்று நாம் நினைத்­தி­ருந்தால் தேர்­த­லில் போட்­டி­யிட்­டி­ருக்க மாட்­டோம் என்றுதமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ள­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்துள்ளார்.Sumanthiran Political Solution

சாவ­கச்­சே­ரி­யில் நேற்­று­முன்­தி­னம் அபி­வி­ருத்­தித் திட்­டம் தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது. அதில் தென்­ம­ராட்­சிப் பிர­தேச ஒருங்­கி­ணைப்­புக் குழு­வின் தலை­வ­ரான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் கலந்து கொண்­டார். அங்கு கருத்­துத் தெரி­வித்­த­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

வட­கி­ழக்கு மாகா­ணங்­கள் இணைந்­தி­ருந்த போது நடந்த மாகாண சபைத் தேர்­த­லி­லும், வடக்கு, கிழக்கு மாகா­ணங்­கள் பிரிந்த பின்­னர் நடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்­த­லி­லும் நாம் போட்­டி­யி­ட­வில்லை. போர் முடிந்த பின்­னர் வடக்கு மாகாண சபை மற்­றும் கிழக்கு மாகாண சபை தேர்­தல்­க­ளில் பங்­கு­பற்­றி­னோம்.

அரசு சில நட­வ­டிக்­கை­களை வரவு – செல­வுத் திட்­டத்­துக்கு உட்­பட்டு முன்­னெ­டுக்­கின்­றது. அவற்­றின் அடிப்­ப­டை­யில் 2018ஆம் ஆண்­டி­லும், 2019ஆம் ஆண்­டி­லும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் அபி­வி­ருத்­தி­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தைப் பெறுத்­த­வ­ரை­யில் 7 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உள்­ள­னர். அவர்­க­ளில் 5 பேர் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பைச் சேர்ந்­த­வர்­கள். அரசு எமது முன்­மொ­ழி­வு­க­ளைச் சமர்ப்­பிக்­கு­மாறு கோரி­யுள்­ளது.

வடக்கு, கிழக்கு செய­ல­ணி­யில் நாம் பங்கு கொள்­கின்­றோம். அதன் ஊடாக அவ­ச­ர­மான, அத்­தி­யா­வ­சி­ய­மான விட­யங்­க­ளான நில ஆக்­கி­ர­மிப்பு, நில விடு­விப்பு, காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பிரச்­சினை, கைதி­கள் விடு­விப்பு என்­பன பற்­றிய முன்­னெ­டுப்­புக்­களை மேற்­கொள்ள முடி­யும், என்­றார்.

 

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை