இலங்கைக்கு நேராக சூரியன் இன்று உச்சம்

0
473
Heat Hot Sun srilanka today

சூரியனின் தெற்கு நோக்கிய தொடர்பான இயக்கம் காரணமாக இவ் வருடம் ஒகஸ்ட் 28 ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் 7 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்க உள்ளது. (Heat Hot Sun srilanka today)

இன்று (31ஆம் திகதி) நண்பகல் 12.10 அளவில் முசல்குட்டி, துடாரிக்குளம், குடாகம, மெதியாவ மற்றும் மாங்கானை ஆகிய நகரங்களுக்கு அண்மையிலுள்ள பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

காங்கேசன்துறையில் இருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பில் இருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு திசையில் இருந்து வீசுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் இக் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Heat Hot Sun srilanka today