‘நீயும் நானும் அன்பே’ வீடியோ பாடல் – ‘இமைக்கா நொடிகள்’

0
454
Imaikka Nodigal Neeyum Naanum Anbe, Imaikka Nodigal Neeyum Naanum, Imaikka Nodigal, Neeyum Naanum Anbe, Neeyum Naanum Anbe video song, Tamil News, Tamil Cinema News, new tamil movie news, tamil movie news

கோல மாவு கோகிலா” படத்திற்கு பிறகு நயன்தாராவின் கெத்தான நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இமைக்கா நொடிகள்’. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும், நயன்தாராவுக்கு ஜோடியாக விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ளனர்.Imaikka Nodigal Neeyum Naanum Anbe

பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பிற்கு ‘ருத்ரா’ எனும் வில்லன் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதியுள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, புவன் ஸ்ரீநிவாசன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயக்குமார் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்ற இந்த டத்தை நாளை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

தற்போது, படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா டூயட் பாடும் ‘நீயும் நானும் அன்பே’ பாடலின் வீடியோவை வெளியிடப்பட்டுள்ளது.

Tag: Imaikka Nodigal Neeyum Naanum Anbe

எமது ஏனைய தளங்கள்