கேரள மக்களுக்கு கோடி நிதியுதவி வழங்கும் லாரன்ஸ்

0
287
Raghava Lawrence Kerala flood fund, Raghava Lawrence Kerala flood, Raghava Lawrence Kerala, Raghava Lawrence, Kerala flood fund, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கேரள மாநிலத்திற்கு நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளார்.Raghava Lawrence Kerala flood fund

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவுக்கு உதவிகள் வந்து குவிகின்றன. ஏனைய மாநில அரசுகள், திரைப்பட பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோரும் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, விக்ரம் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்ட பலரும் நிதியுதவிகளை அளித்துள்ளனர்.

நடிகர் விஜய் 70 லட்சம் நிதியுதவியாக அளித்துள்ளார். அதேபோல், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சுஷாந்த சிங் ராஜ்புத், கேரள மக்களுக்காக ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடியை நிதியாக அளிக்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வருகிற 25ம் திகதி கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து அவர் அந்த நிதியை வழங்க இருக்கிறார்.

Tag: Raghava Lawrence Kerala flood fund

எமது ஏனைய தளங்கள்