Categories: Head LineNEWS

மஹிந்த மீண்டும் ஜனாதிபதியாவதில் சட்டசிக்கல் இல்லை! ஜீ.எல்.பீரிஸ் கருத்து!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டபூர்வ தடைகள் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. Mahinda Participate President Election No Legal Issues Tamil News

கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அந்த கட்சியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

’19வது திருத்தச்சட்டதிற்கு அமைய, இதற்கு முன்னர் நாட்டுக்காக இரண்டு தடவைகள் சேவையாற்றிய இரண்டு ஜனாதிபதிகளில் இருவர். அவர்களில், ஒருவர் மஹிந்த ராஜபக்ஸ மற்றையவர் சந்திரிக்கா அம்மையார்.

அவர்கள் இருவருக்கும் எதிரக்காலத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 19ஆம் திருத்தச்சட்டத்தின் ஊடாக சட்டபூர்வ தடைகள் இல்லை என நாம் நம்புகிறோம்.

காரணம் அரசியலமைப்பின் 30ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து குறிப்படப்பட்டுள்ளது. ஜெ.ஆர் ஜெயவர்தன தயாரித்த அரசியலமைப்பில் ஜனாதிபதியின் பதவிக்காலம் அமைப்பது குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது.

எனினும் 19வது திருத்தச்சட்டத்தின் ஊடாக அந்த சரத்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. அந்த சரத்தில் இவர்கள் திருத்தம் செய்யவில்லை. அதனை முழுமையாக நீக்கிவிட்டு அதற்கு பதில் புதிய ஜனாதிபதி முறையினை இவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஜெ.ஆர்.ஜெயவர்தனவின் ஜனாதிபதி முறையில், அமைச்சர்களை நியமிக்கவோ, பதவி நீக்கவோ ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரம் உள்ளது.

ஆனால் 19 இல் ஜனாதிபதிக்கு அவ்வாறான அதிகாரம் இல்லை. அதேபோல் பொது தேர்தலின் ஒரு வருடத்தின் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம். 19 இல்ல அவ்வாறு இல்லை.

அதேபோல், ஜனாதிபதி தனது பதவிக்காலத்தில் நிறைவேற்று அதிகார முறையினைப் பயன்படுத்த மூன்றில் இரண்டு உறுப்பினர்களின் அனுமதியினைப் பெறவேண்டும். ஜெ.ஆர். இன் அரசியலமைப்பில் ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் போது அவருக்கு எதிராக வழக்கு தொடர முடியாது.

ஆனால் 19 இல் வழக்கு தொடரலாம் இவ்வாறு அந்த ஜெ.ஆர்.இன் ஜனாதிபதி முறையினை முற்றாக மாற்றியுள்ளது. 19 உம், ஜெ.ஆர் இனதும் ஜனாதிபதி பதவிகள், அதன் அதிகாரங்கள் முற்றிலும் மாறுபட்டது.

இந்நிலையில், 19 ஆம் திருத்தத்தில் ஒரு சரத்து இருக்கிறது. ’19ஆம் திருத்திற்கு அமைய இந்த ஜனாதிபதி முறையில் இரண்டு தடவைகளுக்கு ஜனாதிபதியாக ஆட்சி செய்தவர்கள் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அது 19ஆம் திருத்தத்தின் ஊடான முறையில் என்றே பொருள்படும். எனவே 19 இல் உள்ளடக்கப்படாத நிறைவேற்று அதிகாரம் அதிகம் படைத்த ஜெ.ஆர்.இன் ஜனாதிபதி முறையில் ஆட்சிசெய்தவர்களுக்கு அது பொருந்தாது என்றே நம்புகிறோம்.

எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்லில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு மீண்டும் போட்டியிட சட்ட சிக்கல் இருக்காது என நாம் நம்புகிறோம்.’ என தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Jey

Share
Published by
Jey
Tags: Mahinda Participate President Election No Legal Issues

Recent Posts

பெற்ரோல் விலை மீண்டும் உயர்வு

பெற்ரோல் விலை லீற்றருக்கு 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ள அதேவேளை, டீசல் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை. (petrol price increased yet Chennai Today India News in Tamil)…

36 mins ago

க.பொ.த சாதாரணதர பரீட்சை : அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்களுக்கான அறிவித்தல்!

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்துள்ளனர். GCE OL National Identity…

42 mins ago

“மிருங்கங்களுடன் செக்ஸ் வைப்பது தவறல்ல ” இயக்குனர் அமீர் சர்ச்சை கருத்து

மனிதர்கள் விலங்குகளுடன் உணர்வு வதால் அதும் ஒன்றும் பெரிய தப்பு இல்லை என ஒரு கருத்தை இயக்குனர் அமீர் வெளியிட்டுள்ளது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .(Director Amir…

47 mins ago

உடல்நலக்குறைவால் வியட்நாம் அதிபர் மரணம்

வியட்நாம் அதிபர் டிரான் டாய் குவாங் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 61. கடந்த 2016 ஆம் ஆண்டு வியட்நாம் அதிபராக பதவியேற்ற குவாங், கடுமையான…

59 mins ago

ட்ராவிட் எனக்காக ஒதுக்கிய 5 நிமிடங்கள் என் கிரிக்கட் வாழ்வையே மாற்றியது

கிரிக்கெட் விளையாட வரும் இளம் வீரர்கள் சீனியர்களிடமிருந்து ஆலோசனைகள் பெற வேண்டும் எனப் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார். younis khan talks rahul…

59 mins ago

உதய கம்மன்பில வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!

அவுஸ்திரேலிய பிரஜையொருவருக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை போலி ஆவணங்களை பயன்படுத்தி, 21 மில்லியன் ரூபாவுக்கு விற்பனைச் செய்து நிதி மோசடி செய்த சம்பவம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர்…

1 hour ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.