சிவனொளிபாதம் புத்தரின் பாதமானது; நடவடிக்கை எடுக்க கோரிக்கை

0
550
sripada issues condemned sriLanka Saiva Maha Sabha

சிவனொளிபாதம் என பொறிக்கப்பட்டிருந்த பெயர் பலகை தற்போது ஸ்ரீ புத்தரின் பாதம் எனப் பொறிக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டுள்ளமைக்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. (sripada issues condemned sriLanka Saiva Maha Sabha)

அகில இலங்கை சைவ மகாசபை இந்த விடயம் தொடர்பாக கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்தச் சபை அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பன்னெடுங்காலமாக சைவத் தமிழர்களால் சிவனொளிபாத மலையாக போற்றி வழிபடப்பட்ட சிவனின் பாதம் தற்போது தமிழிலும் ஸ்ரீ புத்தரின் பாதம் எனப் பொறிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையை சைவ மகா சபை வன்மையாக மறுப்புத் தெரிவிக்கின்றது.

இராவணன் ஆண்ட வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே சிவபூமி என அழைக்கப்பட்ட மண்ணில், பிற்காலத்தில் ஒவ்வொருவரும் தம் விருப்புக்கேற்ப பெயர்களை தங்கள் மொழியில் மாற்றிய போதும், சைவத் தமிழர்கள் சகிப்புத் தன்மையுடன் தாங்கிக் கொண்டனர்.

ஆனால் இன்று தமிழ் மொழியிலேயே தமிழர்கள் பல ஆயிரம் வருடங்கள் வழங்கிய ஆதி பெயர் மாற்றப்பட்டு, காட்சிக் கல்லில் பொறிக்கப்பட்டு இருப்பது இலங்கைத் தீவில் வாழும் ஒட்டுமொத்த சைவத் தமிழர்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

எனவே, அரசு உடனடியாக சிவனொளிபாதம் என சரிவரப் பெற்றிக்க ஆவண செய்ய வேண்டும் என சைவ மகா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன், இந்து கலாசார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தேசிய சகவாழ்வு மற்றும் மொழிக் கொள்ளை அமைச்சர் மனோ கணேசன் ஆகியோர், தங்கள் அதிகாரங்களை உரிய முறையில் பயன்படுத்தி உடனடியாக சைவத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு தீர்வை வழங்க வேண்டும் எனவும் இந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; sripada issues condemned sriLanka Saiva Maha Sabha