வடமத்திய மாகாணத்திலுள்ள 50 சதவீதமானோருக்கு சீறுநீரக நோய் இல்லை

0
536
50 percent North Central province not Kidney disease

வடமத்திய மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் நடத்தப்பட்ட வைத்திய பரிசோதனைகளுக்குப் பின்னர் சிறுநீரக நோய் உள்ளதாக கண்டறியப்பட்ட நோயாளிகளில் 50 சதவீதமானோர் இந்த நோயினால் பாதிக்கப்படவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. (50 percent North Central province not Kidney disease)

சிறுநீரக நோயாளர்கள் என கண்டறியப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது மருத்துவ பரிசோதனையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக நோய் நிபுணர் வைத்தியர் பிரமில் ராஜ கிருஷ்ணா வடமத்திய மாகாணத்தின் பிரதான செயலாளருக்கு கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார்.

சிறுநீரக நோய் தொடர்பான தவறான அறிக்கைகள் பெற்றிருப்பது, தரம் குறைந்த இயந்திரங்கள்; பாவிப்பதனால் என்றும் வைத்திய நிபுணர் மாகாண செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்வேதியியல் பகுப்பாய்வு இயந்திரங்கள் கொள்வனவு செய்யும் போது தேர்ந்தெடுக்கப்படவுள்ள இயந்திர மாதிரி தொடர்பாக இரண்டு வருடங்களாக கொள்வனவு செய்யும் குழு சிக்கியுள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தரம் உயர்ந்த இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு தான் அறிவுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வடமத்திய மாகாண சுகாதார சேவை இயக்குநர் அலுவலகத்தின் திட்டமிடல் மருத்துவர் தம்மிக த சில்வா தெரிவிக்கையில், இது தொடர்பாக அவசர கூட்டம் ஒன்றை கூட்ட வடமத்திய மாகாணத்தின் பிரதான செயலாளரை கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 50 percent North Central province not Kidney disease