சிங்களவர்கள் காணி அப­க­ரிப்பு முயற்சி – முல்­லைத்தீவில் முறி­ய­டிப்பு

0
459
Sinhala People Land Seize Mullaitivu

மகா­வலி எல் திட்­டத்­தில் அதி­கா­ரி­கள் ஒதுக்­கீடு செய்­த­னர் என்று கூறி காணிளை அப­க­ரிக்க எடுக்­கப்­பட்ட முயற்சி அதி­கா­ரி­கள் மற்­றும் அர­சி­யல்­வா­தி­கள் தலை­யீட்­டால் தடுத்து நிறுத்­தப்­பட்­டது.(Sinhala People Land Seize Mullaitivu ,Tamilnews,Srilanka Tamilnews)

அந்­தப் பகு­தி­யில் குடி­யேற் றப்­பட்­டுள்ள சிங்­க­ளக் குடும்­பங்­களே காணி­களை அப­க­ரிக்­கும் முயற்­சி­யில் இறங்­கின எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

முல்­லைத்­தீவு – கொக்­குத்­தொ­டு­வாய், கோட்­டைக்­கே­ணிக்கு அப்­பால் தமி­ழர்­க­ளின் பூர்­வீக பகு­தி­க­ளான சிவந்தா முறிப்­புக்­கு­ளம் உள்­ளது. அதனை அண்டி வயல் நிலங்­கள் உள்­ளன. இந்த வயல் நிலங்­க­ளையே அக­ரிக்­கும் முயற்சி எடுக்­கப்­பட்­டுள்­ளது.

அந்­தக் காணி­கள் மகா­வலி எல் திட்­டத்­தின் கீழ் தங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டவை என்று காணிளை அப­க­ரிக்க முயன்ற சிங்­க­ளக் குடும்­பத்­தி­னர் தெரி­விக்­கின்­ற­னர்.ஆனால், அது ஏற்­க­னவே தமி­ழர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட காணி­கள் என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

‘பெக்கோ’ இயந்­தி­ரத்­தின் மூல­மாக இந்த இடத்­தைத் துப்­பு­ரவு செய்து வயல் வரம்­பு­களை அமைக்­கும் பணி­யைச் காணி­களை அப­க­ரிக்க முயன்­ற­வர்­கள் தொடங்­கி­யி­ருந்­த­னர். கடந்த இரண்டு தினங்­க­ளாக இது இடம்­பெற்­றுள்­ளது.

நேற்­றை­ய­தி­ன­மும் காணி­களை அவர்­கள் துப்­பு­ரவு செய்­து­கொண்­டி­ருந்­த­போது அது குறித்து கொக்­குத்­தொ­டு­வாய் கமக்­கார அமைப்­பி­னர் வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் துரை­ராசா ரவி­க­ரன் மற்­றும் முல்­லைத்­தீவு மாவட்ட கம­நல அபி­வி­ருத்­தித் தினைக்­க­ளத்­தி­னர் ஆகி­யோ­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தி­னர்.

குறித்த இடத்­துக்­குச் சென்ற ரவி­க­ரன், கம­நல அபி­வி­ருத்­தித் திணைக்­கள உதவி ஆணை­யா­ளர் கிரு­சு­ணன் – ஜெகன்­நாத் மற்­றும் திணைக்­கள பணி­யா­ளர் அங்கு விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர்.

மகா­வலி அபி­வி­ருத்தி அதி­கார சபை­யி­னரே அந்­தக் காணி­க­ளைத் தமக்கு வழங்­கி­னர் என்று காணி­க­ளைத் துப்­பு­ரவு செய்த சிங்­க­ளக் குடும்­பங்­கள் தெரி­வித்­தன.

ரவி­க­ரன் உட­ன­டி­யாக மாவட்­டச் செய­ல­ருக்­குத் தக­வல் வழங்­கி­னார். கம­லந சேவை­கள் திணைக்­க­ளத்­தி­னர் மகா­வலி அதி­கார சபை­யி­டம் வின­வி­னர். சம்­பவ இடத்­துக்கு மகா­வலி அதி­கார சபை­யி­னர் விரைந்­த­னர். தாங்­கள் காணி­களை வழங்­க­வில்லை என்று உறு­தி­ய­ளித்­த­னர்.

இத­னை­அ­டுத்து காணி­கள் அப­க­ரி­க­கும் முயற்சி தடுக்­கப்­பட்­டது. இது தொடர்­பில் நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு ரவி­க­ரன் மாட்­டச் செய­ல­ரைக் கேட்­டுக்­கொண்­டார். சம்­பவ இடத்­தில் கரை­து­றைப்­பற்­றுப் பிர­தே­ச­செ­ய­லர் இ.பிர­தா­ப­னும் இருந்­தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Sinhala People Land Seize Mullaitivu ,Sinhala People Land Seize Mullaitivu ,