இராணுவ விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகா!

0
471

முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மீது இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவே கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். Sri Lanka Army Commander Accusing Former Commander Sarath Fonseka Tamil news

இராணுவ விவகாரங்களுக்குள், முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மூக்கை நுழைக்கிறார் என்று அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க முறைப்பாடு செய்துள்ளார்.

தனக்குத் தெரியாமல் சரத் பொன்சேகா இராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவுகளை வழங்குகிறார். இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் குறித்தும் பேசுகிறார் என்றும் சிறிலங்கா அதிபரிடம், இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

இது தொடர்பில் சரத் பொன்சேகா தரப்பிலிருந்து எதுவித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites