’16 மில்லியன் அமெரிக்க டொலர்’ : ‘நான் சொன்னதை பந்துல குணவர்தன தவறாக அர்த்தப்படுத்திவிட்டார்’

0
522
Singapore Sri Lanka FTA effect since May first Malik

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் கடந்த இரண்டு மாதங்களுக்குள் 16 மில்லியன் அமெரிக்க டொலர் நேரடி முதலீடு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தான் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.(malik samarawickrama bandula gunawardane)

அத்துடன், நாடாளுமன்றத்தில் தான் தெரிவித்த கருத்தை வேறு விதமாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் 16 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றதை உறுதி செய்தால் தான் பதவி விலகுவதாக நேற்று முன்தினம் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் கடந்த இரண்டரை மாதங்களுக்குள் 16 மில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிகமான தொகையை நேரடி முதலீடு செய்ய பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவே தான் கருத்து தெரிவித்தாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் தெரிவித்த கருத்தில் எந்த சந்தர்ப்பத்திலும் முதலீடு நாட்டிற்கு கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கவில்லை எனவும் அதனை வேறு விதமாக தெரிவிப்பது முற்றிலும் பொய்யான மற்றும் மக்களை தவறாக வழிநடத்தும் ஒரு தவறான அறிக்கை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பொய்யான மற்றும் கேலிக்குரிய கருத்துக்களை தெரிவிப்பது வங்குரோத்து அரசியல் கட்சிகள் எனவும் அமைச்சர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:malik samarawickrama bandula gunawardane,malik samarawickrama bandula gunawardane,malik samarawickrama bandula gunawardane,