“50 பேர் மீது புகார் கொடுத்தேன்..! ஒரு நடவடிகையும் இல்லை” – ஸ்ரீரெட்டி வேதனை!

0
815

சமீபகாலமாக அதிகமாக அடிபடும் பெரயர், ஸ்ரீரெட்டி. அவர் வெளியீடும் குற்றச்சாட்டுகளை கேட்டு பற்றி எரிகிறது சமூக வலைத்தளம். ஆனால் அவரது குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் பலரும் மெளனமாக இருக்கிறார்கள்.filed complaint 50 people no action “- sri reddy pain

ஆந்திர சினிமா வட்டாரத்தை தாக்கிய அவரின் கோபம் தற்சமயம் தமிழ் சினிமாவின் பக்கம் திரும்பி இருக்கிறது. சென்னை வந்த அவரை புதிய தலைமுறை இணையதளத்திற்காக சந்தித்தோம்.

அதிர்ச்சியூட்டும் பல விஷயங்களை கூறுகிறீர்கள்? இதையெல்லாம் கூற வேண்டுமென உங்களை உந்தித் தள்ளியது என்ன?

“கடந்த 5 ஆண்டுகளாக சினிமாத்துறையில் இருக்கிறேன். முன்னதாக செய்தி வாசிப்பாளாராக பணியாற்றினேன். துரதிருஷ்டவசமான நானே சில தவறுகளை செய்துள்ளேன். 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் நான் தவறு செய்திருக்கிறேன் எனப் புரிந்து கொண்டேன்.

என்னை போல பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என தெரிந்து கொண்டேன். நான் செய்த தவறுகளால் ஒருவருக்கு என்னால் இனி மனைவியாக வாழ முடியாது. என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என அடுத்த பெண்கள் அறிந்து கொள்ளும் வகையில் எனது வாழ்க்கை இருக்க வேண்டுமென நினைத்தேன். இது என் குடும்பத்தினருக்கு தலைகுனிவாக மாறிவிட்டது.”

பாதிக்கப்பட்டவர்கள் ஏன் உங்களைப் போன்று வெளியே சொல்ல மறுக்கிறார்கள் ?

“இது போன்ற விஷயங்களை வெளியே சொன்னால் அவர்களுக்கு வய்ப்பு கிடைக்காது.”

ஆனால் தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக ஊதியம் பெறும் நடிகைகள் இருக்கிறார்கள்; அவர்கள் யாரும் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்ததில்லையே?

“சுச்சி லீக்ஸ் உங்களுக்கு நினைவிருக்கலாம்; அது வன்கொடுமையாக இல்லாமல் இருக்கலாம், விருப்பத்துடன் நடந்த ஒன்று. ஆக இப்படி ஒன்று தமிழ் சினிமாவில் இருக்கிறது என்பதற்கு அதுவே சான்று. கனவுகள், குடும்பம், சமூகம் ஆகியவற்றின் மீதானா பயத்தால் வெளியே சொல்லாமல் மறைத்திருக்கலாம்.

ஆனால் என்னை பொருத்தவரை நான் சொன்ன அனைத்தும் உண்மை; இது போன்ற வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. காவல்துறை விசாரணை நடத்தினால், அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.”

உங்கள் புகார் மீது ஏதேனும் வழக்கு தொடரப்பட்டிருக்கிறதே?

“50 பேர் மீது புகார் கொடுத்தேன், ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை; யாரும் கைதாகவில்லை; வழக்கு முடிக்கப்பட்டது.”

பெண்கள் நல அமைப்பை தொடர்பு கொண்டீர்களா ?

“அவர்கள் தொடர்ந்து எனக்கு ஆதரவளித்து வருகிறார்கள்; அமைச்சரிடம் கூட பேசினார்கள் , ஆனால் எதுவும் நடக்கவில்லை.”

தெலுங்கு நடிகைகள் யாரும் உங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்களா?

“அவர்கள் ஆதரவளிக்க மாட்டார்கள். பெரிய சினிமா தயாரிப்பாளர் மீதும் புகாரளித்தேன். அவருக்கு எதிராக பேசினால் இவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்காது. அதே நேரத்தில் நான் யாருடைய ஆதரவையும் கேட்கவில்லை, ஏனெனில் அவர்களது சினிமா வாய்ப்பு அவர்களுக்கு முக்கியம்.”

தமிழ் சினிமாவைச் சேர்ந்த பிரபலமானவர்கள் சிலருக்கு எதிராவும் நீங்க புகார் கூறியிருக்கிறீர்கள்; உண்மையிலேயே உங்களை அவர்கள் தொடர்பு கொண்டார்களா? வேறு யாருக்காவது இதே போன்று நடந்துள்ளதா?

“சினிமா ஒரு வியாபாரம்; கேமாரவுக்கு முன்னாலும் பின்னாலும் முகங்கள் உண்டு. தனிப்பட்ட வாழ்வில் வேறு மாதிரியாக இருப்பார்கள்; மது அருந்துபவர்கள் உங்களுக்கு முன்னால் செய்ய மாட்டார்கள்; புகைப்பிடிக்க கூட செய்வார்கள்.

ஆனால் மக்கள் முன்னால் அதை செய்ய மாட்டார்கள். தமிழ் சினிமாக்காரர்களையும் மக்களையும் நான் கெஞ்சிக் கேட்பதெல்லாம், பாலியல் தொந்தரவில்லாத இடத்தையே கேட்கிறோம். மனதுக்கு நெருக்கமானவர்களோடு வாழ விரும்புகிறோம். நான் மீண்டும் மீண்டும் கேட்பதெல்லாம் தொந்தரவில்லாத வேலை செய்யும் இடத்தையே.”

உங்களது பேஸ்புக் கமெண்டில் பலரும் கேட்பதெல்லாம் சினிமா வாய்ப்பு தருவதாக கூறியிருந்தாலும், ஸ்ரீ ரெட்டி ஏன் இதனை ஏற்றிருக்க வேண்டும் என கேட்கிறார்கள். அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?

“வீட்டை விட்டு வெளியேறி எந்த ஆதரவும் இல்லாமல் இருக்கிறேன். வீட்டு வாடகை, உணவு என எல்லாம் நானே செய்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன். செய்தித்துறையில் வேலையை விட்டு விட்டு சினிமா வந்தேன். 3 படங்கள் நடித்தேன். எப்போது நான் தவறு செய்கிறேன் என நினைத்தேனோ அப்போது மீண்டும் செய்தி வாசிப்பாளராக முயற்சித்தேன்.

ஆனால் எனக்கு வேலை கிடைக்கவில்லை. நண்பர்களால் எத்தனை நாள் எனக்கு உணவளிக்க முடியும். இத்தனை அழுத்தங்களுக்கு மத்தியில் நான் எப்படி தவறு செய்யாமல் இருந்திருக்க முடியும்?.”

நீங்கள் ஏன் வேறு வேலை தேடி இருக்க கூடாது ?

“சினிமாவே எனது இலக்கு, அதில் கேள்வி கேட்க யாருக்கும் உரிமையில்லை; நான் என்ன வேலை செய்ய வேண்டுமென யாரும் சொல்லத் தேவையில்லை, சினிமாவில் சாதிக்க விரும்புகிறேன்; ஏனெனில் அது எனது உரிமை.”

பாலியல் விவகாரங்கள் இல்லாமல் சினிமா துறையில் சாதிப்பது இப்போது வரை சாத்தியமில்லையா?

“1 லட்சம் சதவீதம் சாத்தியமில்லை.”

உங்களது சக நண்பர்களுக்கும், நடிகைகளுக்கும் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

“இருவரும் விருப்பத்தின் அடிப்படையில் உறவு கொள்ளுவதில் பிரச்னையில்லை; ஆனால் போலியான வாக்குறுதிகளை கொடுத்து பாலியல் தொந்தரவு தருவது தவறு. உங்களது பசிக்கு அவர்களை இரையாக்கக் கூடாது.

அவர்களை புரிந்து கொள்ளுங்கள்; அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்வதெல்லாம் திறமையை நிரூபியுங்கள்; பெண்களை மதியுங்கள் ஏனெனில் பெண்கள் அதற்கு தகுதியானவர்கள்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :