நான் கார் ஒட்டிகிட்டே ,நடந்துகிட்டே பால் கொடுத்து இருக்கின்றேன் : நடிகை கஸ்தூரி

0
480

ராம்ப்வாக் செய்து கொண்டே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த மாடலை புகழ்ந்த கஸ்தூரியுடன் நெட்டிசன்ஸ் மல்லுக்கு பாய்ந்துள்ளனர். அமெரிக்காவின் மயாமி நகரில் நடந்த ஃபேஷன் ஷோவில் மாடல் மாரா மார்ட்டின் தனது 5 மாத பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்தார். அதை பலரும் பாராட்டியுள்ளனர். நடிகை கஸ்தூரியும் மாராவின் செயலை பாராட்டி ட்வீட்டினார்.Mara Teigen Brest feeding ramp walk

மாரா செய்தது போன்று இங்கு நடந்திருந்தால் பாராட்டியிருக்க மாட்டார்கள் மாறாக விமர்சித்திருப்பார்கள். தாயின் மார்பு கூட காமப்பொருள் என்று கஸ்தூரி ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

Actress kasturi tweet america breast feed model

300 ஆண்டுகளுக்கு முன்பு வரை மேலாடை இல்லாமல் வாழ்ந்தவர்கள் அவர்கள். அவர்களை பற்றிய விஷயத்தை எல்லாம் பெரிதாக பேசாதீர்கள் என்று ஒருவர் கஸ்தூரியின் ட்வீட்டை பார்த்து கமெண்ட் போட்டார்.

நெட்டிசனின் கமெண்ட்டை பார்த்த கஸ்தூரி எதை எப்படி புனிதமாக பார்க்கிறோம் என்பதை தான் தினமும் செய்தியில் பார்க்கிறோமே என்று நம் நாட்டில் நடக்கும் அவலத்தை மறைமுகமாக கூறினார்.

இந்த வயதில் ஐட்டம் டான்ஸ் ஆடிக்கிட்டு ட்விட்டரில் கருத்து சொல்வதா என்று ஒருவர் கேட்டதற்கு கஸ்தூரியோ, “உன்னை சொல்லி குத்தமில்லை . டான்ஸ் ஆட வேண்டிய வயசுல உள்ளவர்களை அம்மா அண்ணி வேஷத்துல பார்த்து , படிக்க வேண்டிய வயசுல உள்ள சிறுமிகளை i டான்ஸ் ஆட விட்டு பார்த்து வக்கிரம் ஊறி போன சமுதாயம் ஆயிட்டோம் .” என்றார்.

நடந்து கொண்டே பால் கொடுப்பது எல்லாம் விளம்பரம் என ஒருவர் கமெண்ட் போட்டார். அதை பார்த்த கஸ்தூரி, ‘நான் கார் ஓட்டிகிட்டே , சமைச்சுக்கிட்டே, பஸ்ஸுல, ஏர்போர்ட்டுல ஓடிக்கிட்டே எல்லா சந்தர்ப்பத்துலயும் பால் குடுத்துருக்கேன். மேடையில ஒரு வினாடிவினா போட்டியில பங்கெடுத்துகிட்டே பால் கொடுத்திருக்கேன். கனடாவுல ஒரு MP பால் கொடுத்துக்கிட்டே நாடாளுமன்ற வோட்டெடுப்புல கலந்துக்கிட்டாங்க.’ என்றார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
மனைவியை வற்புறுத்தி செக்ஸ் வைத்தால் அதுவும் பலாத்காரமே : டெல்லி நீதிமன்றம் அதிரடி
தாய்பால் ஊட்டியவாறு ராம்ப் வாக்கில் வலம் வந்த மாடல் அழகி
பிரபலங்களின் வாரிசுகளின் அந்தரங்கங்களை அவிழ்த்தெறியும் ஸ்ரீ ரெட்டி
செலவிற்கு கூட என்னிடம் பணம் இல்லை : உடலில் தெம்பு இல்லை : ஸ்ரீ ரெட்டி பேட்டி
ஆதாரம் வேண்டுமென்றால் எனது பெண்ணுறுப்பிலும் மார்பகங்களிலும் தான் கமெரா வைக்க வேண்டும் : ஸ்ரீ ரெட்டி அதிரடி
‘ஒரு வருடமாக என் மகளுக்கு அப்பாவாகவும் அம்மாவாகவும் நான் தான் இருக்கன்.’ பாலாஜி முன் உருகிய நித்யா!
லண்டனில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்
‘ஐஸ்வர்யா! ஷாரிக் உனது உற்ற நண்பன் என்றாலும் இவ்வாறு எல்லை மீறி போயிருக்கக் கூடாது’ விளாசும் மும்தாஜ்.
துப்பில்லாத கேப்டன் : வைஷ்ணவியை காரி துப்பும் பாலாஜி
காம வெறியின் உச்சத்தால் உறவின் போது உயிரிழந்த பெண்! மாட்டிய காதலன்

எமது ஏனைய தளங்கள்