விசேட அமர்வு: சற்றுமுன்னர் வெளியேறியது ரெலோ

0
469
telo walkout northern province special meeting

டெனீஸ்வரனின் அமைச்சுப் பதவி குறித்து விவாதிக்கும் வகையில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட வடக்கு மாகாண சபையின் விசேட அமர்விலிருந்து ரெலோ சற்றுமுன்னர் வெளியேறியுள்ளது.(telo walkout northern province special meeting)

இந்த விவாதத்தை கோரிய உறுப்பினர்களில் தாமும் இருக்கின்ற போதிலும், இந்த விவாதத்திற்கான நோக்கம் திசைதிருப்பப்படுவதற்கும், கருத்து மோதல்களுக்குமே வழிவகுக்கும் எனத் தெரிவித்து அவர்கள் வெளியேறியுள்ளனர்.

வட மாகாண சபையின் போக்குவரத்து மீன்பிடி அமைச்சராக இருந்த டெனீஸ்வரனை முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவி நீக்கம் செய்து புதிய அமைச்சரை நியமித்திருந்தார்.

தன்னுடைய அமைச்சுப் பதவியை முதலமைச்சர் நீக்கியது தவறு எனக் குறிப்பிட்டு மேன்முறையீட்டு நீதிமன்றில் டெனீஸ்வரன் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 29ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவில் டெனீஸ்வரன் தொடர்ந்தும் அமைச்சு பதவியில் நீடிக்கலாம் என்றும் முதலமைச்சர் நீக்கியது செல்லுபடியற்றது என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக விவாதிப்பதற்காக இன்று விசேட அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இன்றைய அமர்வில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:telo walkout northern province special meeting,telo walkout northern province special meeting,telo walkout northern province special meeting,