லங்கன் பிரீமியர் லீக் தொடருக்கு முற்றுப்புள்ளி? : உத்தியோகபூர்வ அறிவிப்பு

0
854
Lankan premier league 2018 postponed

(Lankan premier league 2018 postponed)

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடத்தப்படவிருந்த லங்கன் பிரீமியர் லீக் தொடர் பிற்போடப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

ஐசிசியின் அங்கீகாரம் பெற்றுள்ள பல கிரிக்கெட் அணிகள் சர்வதேச வீரர்களின் பங்கேற்பில் டி20 தொடர்களை நடத்தி வருகின்றது. இதில் கனடா கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் குளோபல் டி20 லீக் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையும் புதிய டி20 தொடரை ஆரம்பிக்கவுள்ளது.

எனினும் இலங்கை கிரிக்கெட் சபையால் எதிர்வரும் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படவிருந்த லக்கன் பிரீமியர் லீக் தற்போது பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை லங்கன் பிரீமியர் லீக்கின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ரஷல் ஆர்னல்ட் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக திலங்க சுமதிபால செயற்பட்ட தருணத்தில் லங்கன் டி20 தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது. எனினும் சுமதிபால கடந்த மே மாதம் பதவி விலகியதன் காரணமாக இந்த போட்டித் தொடர் பிற்போடப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை கிரிக்கெட் சபை விளையாட்டுத்துறை அமைச்சின் கண்காணிப்பில் செயற்பட்டு வருவதுடன், அந்த அமைச்சின் செயலாளர் கிரிக்கெட் சபையின் தலைவராக செயற்பட்டு வருகின்றார்.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் தேர்தலுக்கு பின்னரே லங்கன் பிரீமியர் லீக் நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Lankan premier league 2018 postponed, Lankan premier league 2018 postponed, Lankan premier league 2018 postponed