ஸ்டாலின் தூண்டுதலால் தான் 8 வழிச்சாலைக்கு போராட்டம் நடக்கிறது” – ஜான் பாண்டியன்

0
501
accused opposition leader Stalin stirring Green campaign indiatamilnews

accused opposition leader Stalin stirring Green campaign indiatamilnews

“எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தூண்டுதலால் தான் ஒருசாரார் பசுமை வழிச்சாலைக்கு எதிராக போராடி வருகின்றனர்” என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கடந்த 3 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஒவ்வொரு பகுதியிலும் கட்சி நிர்வாகிகளைச் சந்திப்பது மற்றும் கட்சிக் கொடியேற்றுவது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார். மேலும், வருகின்ற ஜூலை 15-ம் தேதி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தஞ்சையில் நடைபெறவிருக்கும், வேளாண் மரபியல் மாநாட்டிற்கு நிர்வாகிகளை திரட்டுவது போன்ற ஆலோசனைகளில் ஈடுபட்டார்.

சுற்றுப்பயணத்தின் இறுதி நாளில், ஈரோடு பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஜான் பாண்டியன், “தேவேந்திர குல வேளாளர்களின் குல தொழில் வேளாண் தொழில் செய்வது. வேளாண் தொழில் என்ற ஒன்றை முன்னிறுத்தும் போது பெரிய சமுதாயங்கள் எங்களுடன் இணைவதற்கு வாய்ப்பு அதிகமான இருக்கிறது.

பிற்காலங்களில் வேளாண் மரபினர்கள் தான் இந்த நாட்டை ஆள முடியும் என்ற அடித்தளத்தை நாங்கள் இப்போதே உருவாக்கி வருகிறோம். மேலும், வேளாண் தொழில் செய்யும் எல்லோரும் ஒரே சமுதாயம், ஒரு தாய் மக்கள் என்கின்ற காரணத்திற்காகத் தான் தஞ்சையில் வேளாண் மரபியல் மாநாடு நடக்கவிருக்கிறது” என மாநாட்டுக்கான காரணத்தை கூறி பேச்சை ஆரம்பித்தார்.

தொடர்ந்து பேசியவர், “சேலம் – சென்னை பசுமை வழிச்சாலையை எதிர்த்து ஒருசாரார்கள் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மீத்தேன், ஹைட்ரோகார்பன் பிரச்னைகளுக்கு விவசாயிகள் களத்தில் இறங்கி தன்னிச்சையாக போராடினார்கள். ஆனால், இந்த 8 வழிச்சாலைக்காக விவசாயிகள் யாரும் போராடவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினால் தூண்டப்பட்ட ஒருசிலர் தான் போராடி வருகின்றனர். இந்த விவகாரத்தில்  வெள்ளை அறிக்கை மூலமாக மாநில அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். கம்யூனிஸ்ட் மற்றும் தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் ஆளுங்கட்சியை எதிர்ப்பதாக நினைத்து, நல்ல திட்டங்களை அழிக்கப் பார்க்கிறார்கள்” என்றார்.

accused opposition leader Stalin stirring Green campaign indiatamilnews

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :