சிறுமி மீது பாலியல் வன்புணர்வுக்கு முயற்சி – 24 வயது இளைஞன் சிக்கினார்

0
444
tamilnews low age school girl attempt rape youth arrested

(tamilnews low age school girl attempt rape youth arrested)

புதுக்குடியிருப்பு 2 ஆம் வட்டாரம் கோம்பாவில் பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை சிறுமியொருவர் மீது பாலியல் வன்புணர்வு மேற்கொள்ள முயற்சித்த குற்றச்சாட்டில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த முதலாம் திகதி கோம்பாவில் பகுதியில் வசித்த 16 வயது நிரம்பாத சிறுமி ஒருவரை அவருடைய வீட்டிற்கு அருகில் உள்ள மற்றுமொரு வீட்டிற்கு அழைத்து சென்று இந்த குற்றச் செயலை மேற்கொள்ள இளைஞன் முயற்சித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னர் குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பொலிஸார் சந்தேகநபரை நேற்று (02) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

இதன்போது, குற்றம்சாட்டப்பட்ட இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பான மருத்துவ பரிசோதனை அறிக்கையினை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்கடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

(tamilnews low age school girl attempt rape youth arrested)

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :