14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 25 வயது இளைஞன் கைது

0
840
14 year old girl sex abuse 25 year old youth arrested

காலி, ஹினிதுமை பிரதேசத்தில் இருந்து 14 வயது சிறுமியை பியகமை, முகலான பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. (14 year old girl sex abuse 25 year old youth arrested)

இந்தச் சம்பவம் தொடர்பாக 25 வயதுடைய இளைஞன் ஒருவரை தொம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹினிதுமை பிரதேசவாசிகளான இருவருக்கிடையில் காதல் தொடர்பு இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் இந்த சிறுமியை அழைத்துக்கொண்டு பியகமை, முகலான பிரதேசத்தில் வீடொன்றில் தடுத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகம் புரிந்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தகவல் அறிந்து சிறுமியை மீட்டு தொம்பே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தொம்பே பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன், இந்தச் சிறுமியை அழைத்துச் சென்ற பஸ் வண்டியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சிறுமியை வைத்திய சோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

சந்தேக நபரான இளைஞனை பூகொடை நீதவான் முன் முன்னிலைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; 14 year old girl sex abuse 25 year old youth arrested