சீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம்! கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்!

0
1489
China Controls Sri Lanka Economy SL Government Under Threat

இலங்கை அரசியல் தளத்தில் சீனாவின் செல்வாக்கு இலங்கை அரசு நினைத்ததிலும் பார்க்க ஒரு படி அதிகமாகவே வளர்ந்து வருகின்றது. China Controls Sri Lanka Economy SL Government Under Threat

சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கம், சிறிலங்காவில் 40 வீதமான கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிறது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கம், சிறிலங்காவின் கட்டுமானத் தொழில்துறையில் தமது பங்கை 70 வீதமாக அதிகரிக்கவுள்ளது.

அதுமட்டுமன்றி , சீனாவை இலங்கையில் காலூன்ற வைக்க கடும் முயற்சிகளை மேற்கொண்ட ராஜபக்சா அரசு பல இரகசிய ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையை குறிப்பிடத்தக்க அளவு சீனாவிடம் தாரை வார்த்து கொடுத்துள்ளது என்றே கூற வேண்டும்.

அண்மையில் நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்டுள்ள புலனாய்வு செய்தியறிக்கையில் , 2015 அதிபர் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரைக்காக சீன நிறுவனம் ஒன்று 7.6 மில்லியன் டொலர்களை வழங்கியதாக கூறியிருந்தது.

இந்த நன்கொடைகளுக்கு பிரதி உபகாரமாக அம்பாந்தோட்டையின் பலவாயிரம் ஏக்கர்கள் சீனாவுக்கு குத்தகை என்னும் பெயரில் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் சீனா என்றாலே புதிய ஆக்கிரமிப்பாளர் என்னும் பார்வை விரைவாக படர்ந்து வருகின்றது.

இந்நிலையில் , மைத்திரி அரசு சீனா தொடர்பில் சிறிது கலக்கம் அடைந்திருப்பதாகவே தெரிகின்றது. நியூயோர்க் ரைம்ஸ் செய்தி வெளியாகிய சிறிது நாளில் அவசர அவசரமாக சிறிலங்கா கடற்படையின் தென்பிராந்திய தலைமையகம் அம்பாந்தோட்டைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டையை இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று சீனாவுக்கு சிறிலங்கா கூறியுள்ளது. எனினும் இந்த ஒப்பந்தம் மீறப்பட்டு சீனா தனது இராணுவ செயற்ப்பாடுகளை முன்னெடுக்கும் பட்சத்தில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் கோவத்துக்கு இலங்கை ஆளாக வேண்டி வரும்.

இந்த இக்கட்டான சூழ்நிலையை கையாள , சீனாவின் இராணுவ பிரசன்னத்தை அம்பாந்தோட்டையில் எதிர்க்கும் உத்தியாகவே கடற்படை தலைமையக மாற்றம் இடம்பெற்றுள்ளது

இது குறித்து விசேட அறிக்கை ஒன்றும் வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது :-

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு சிறிலங்கா கடற்படையிடமே இருக்கும். துறைமுகத்தின் பாதுகாப்புக் குறித்து அச்சம் கொள்ள வேண்டியதில்லை.அம்பாந்தோட்டை துறைமுகம் வணிகத் தேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்தப்படும். ” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவை ஒருபுறமிருக்க , கட்டுமான பொருளாதார ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையை கட்டி வைக்கும் சீனாவின் முயற்சிக்கு தடையாக மற்றுமொரு ஒப்பந்தம் கைச்சாத்தாககியுள்ளது

சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கத்துடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளது. அதன்படி , சிறிலங்காவில் கட்டுமானத் திட்டங்களின் போது, உள்ளூர் நிறுவனங்களுடன் அதனைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த உடன்பாடு கையெடுத்திடப்பட்டுள்ளது.

என்ன தான் ஒப்பந்தங்கள் , இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் இலங்கையில் சீனாவின் அசுரவேகத்திலான நகர்வின் முன்னால் இவையெல்லாம் வெள்ளம் வந்த பின்னர் அணைகட்டும் முயற்சி போலவே உள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites