அமெரிக்க டொலரின் பெறுமதி 200 ரூபாவாக அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது – பந்துல

0
377
Bandula condempt governments economic policy Dollar up 200 rupees

(Bandula condempt governments economic policy Dollar up 200 rupees)

நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை காரணமாக அமெரிக்க டொலரின் பெறுமதி 200 ரூபா வரையில் அதிகரிப்பதை தடுக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சினால் பொது மக்களின் நிதி ஒழுங்கற்ற முறையில் கையாளப்படுவதாக தெரிவித்து அது தொடர்பாக தகவலறியும் சட்டத்தின் கீழ் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக அவர் நேற்று நிதியமைச்சுக்கு சென்றிருந்தார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தநிலை மேலும் அதிகரிக்கலாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது கடன்களை மீளச் செலுத்துவதற்கு போதுமான வருமானம் இருக்கவில்லை என்று பிரதமர் கூறும் கருத்து பொய்யானது என்றும் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் கடன் தவணையை செலுத்தியதன் பின்னரும் வருமானத்தில் சிறு தொகை எஞ்சியிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டார்.

(Bandula condempt governments economic policy Dollar up 200 rupees)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites