இலங்கையின் ஜனாதிபதியாக சர்வாதிகாரி ஹிட்லர் வேண்டாம் – அஜித் பி பெரேரா

0
373
agreement Sri Lanka Singapore signed regular basis ajith perera

(Rajitha Minister Ajith P Perera said country dictator like Hitler)

நாட்டு மக்கள் அனைவரையும் இனப்பேதமின்றி மதிக்கும் தலைவரே நாட்டுக்கு தேவையே அன்றி ஹிட்லர் போன்ற சர்வாதிகாரி அல்ல என்று ராஜாங்க அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

நாட்டில் மீண்டும் ஹிட்லர்களுக்கு இடமளிக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹிட்லர் போன்ற ஒருவர் தேவை எனக் கூறும் தரப்பினர் பற்றி நாட்டு மக்கள் இரண்டு முறைக்கு சிந்தித்து பார்க்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

இலங்கைக்கு ஹிட்லர் ஒருவர் அவசியமா?. இந்த நாட்டுக்கு எதிர்பார்க்கும் ஹிட்லர் என்ன செய்தார்.

ஜேர்மனியில் இருந்த ஹிட்லர் ஜனநாயகத்தை முற்றாக ஒழித்து, செயற்கையான அபிவிருத்தியை காண்பித்தார்.

பின்னர் உண்மையான இனவாதத்தை காண்பித்து யூதர்களை கொன்றொழித்தார்.

ஆறு மில்லியன் யூதர்களை கொன்றொழித்தார். இறுதியில் ஹிட்லர் ஜேர்மனிக்கு எதனை உரித்தாக்கினார்?. ஜேர்மனியில் இருந்த முழு வளமும் அழிந்ததுடன் நாடு இரண்டாக பிளவுப்பட்டது.

பல நூறு ஆண்டுகளாக கட்டியெழுப்பட்ட ஜேர்மனி அழிந்தது.

இதன் மூலம் அவர் பல மில்லியன் மக்களை பாதாளத்திற்குள் தள்ளினார். இப்படியான ஹிட்லரா இலங்கைக்கும் வேண்டும் என்கின்றனர்?.

ஹிட்லர் போன்ற ஒருவரால் இலங்கையை எதிர்காலத்தில் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியுமா?.

நாட்டை கட்டியெழுப்ப ஹிட்லர் போன்ற ஒருவர் வேண்டும் எனக் கூறுபவர்கள் குறித்து நாம் இரண்டு முறை சிந்திக்க வேண்டும்.

ஜனநாயகத்தை நம்பும் தலைவர்களே நாட்டுக்கு தேவை. ஹிட்லர்கள் அல்ல என்று அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.

அனைத்து இன மக்களையும் சமமாக மதிக்கும் மனித நேயமிக்க தலைவரே நாட்டுக்கு தேவை. எமது நாட்டுக்கு ஹிட்லர்கள் தேவையில்லை.

இதற்காக எந்த அர்ப்பணிப்புகளையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கின்றோம் என அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

(Rajitha Minister Ajith P Perera said country dictator like Hitler)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites