சந்திமாலின் சதத்தால் தப்பித்தது இலங்கை

0
515
West Indies vs Sri Lanka 2nd Test day 1 news Tamil

மே.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணித் தலைவர் தினேஷ் சந்திமாலின் அபார ஆட்டத்தின் உதவியுடன் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 253 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

மே.தீவுகளின் வேகப்பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் ஒருபக்கம் விக்கட்டுகள் சரிக்கப்பட, இயுறுதிவரை தனியாளாக நின்று துடுப்பெடுத்தாடிய சந்திமால் 119 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா 33 ஓட்டங்களையும், குசால் மெண்டிஸ் 45 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க ஏனைய வீரர்கள் மீண்டும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

மே.தீவுகள் அணிசார்பில் நேற்றைய தினம் தனது 150வது டெஸ்ட் விக்கட்டை கைப்பற்றிய கீமா ரோச் 4 விக்கட்டுகளையும், கேப்ரியல் 5 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.

தங்களது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள மே.தீவுகள் அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் விக்கட்டிழப்பின்றி 2 ஓட்டங்களை பெற்றுள்ளது.

<<Tamil News Group websites>>

West Indies vs Sri Lanka 2nd Test day 1 news Tamil, West Indies vs Sri Lanka 2nd Test day 1 news Tamil