தொடர் வெற்றிகளுடன் முன்னேறுகிறார் செரீனா!

0
615
French Open 2018 Latest news Tamil

(French Open 2018 Latest news Tamil)

ரோலன்ட்-கர்ரோஸ் என அழைக்கப்படும் முன்னணி டென்னிஸ் தொடரான பிரென்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் செரீனா வில்லியம்ஸ் வெற்றிபெற்றுள்ளார்.

செரீனா வில்லியம்ஸ் குழந்தை பெற்ற பின்னர் தொடர் தோல்விகளினால் துவண்டு போயிருந்த நிலையில், முதல் சுற்றுப்போட்டியில் செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவாவை எதிர்கொண்டு வெற்றிபெற்றார்.

இந்நிலையில் நேற்றைய இரண்டாவது சுற்றுப்போட்டியில், அவுஸ்திரேலியாவின் அஷ்லியை பார்டியை எதிர்கொண்ட செரீனா, 2-1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார்.

முதல் செட்டை 6-3 என கைப்பற்றி பார்டி, செரீனாவுக்கு அதிர்ச்சிக்கொடுத்தார். எனினும் அடுத்த இரண்டு செட்களிலும் சுதாரித்துக்கொண்டு ஆடிய செரீனா 6-3 மற்றும் 6-4 என வெற்றிபெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

செரீனா அடுத்த சுற்றில் ஜேர்மனியின் ஜுலியா கோர்ஜஸை எதிர்கொள்ளவுள்ளார்.

<<Tamil News Group websites>>