ரஜி­னிகாந்த் மன்­னிப்புக் கேட்க வேண்டும்- சென்னை பத்­தி­ரி­கை­யாளர் சங்கம்

0
478
Chennai Press Association Rajini apologize journalist unanimous manner

Chennai Press Association Rajini apologize journalist unanimous manner

தமி­ழ­கத்தின் தூத்­துக்­குடி மாவட்­டத்தில் இடம்­பெற்ற துப்­பாக்­கிச்­சூட்டில் பாதிக்­கப்­பட்ட மக்­களை சந்­தித்­து­விட்டு, செய்­தி­யா­ளர்­களை சந்­தித்த நடிகர் ரஜி­னிகாந்த் கோபத்தில் செய்­தி­யா­ளரை ஒரு­மையில் திட்­டி­ய­தற்கு மன்­னிப்புக் கேட்க வேண்டும் என்று சென்னை பத்­தி­ரி­கை­யாளர் சங்கம் தெரி­வித்­துள்­ளது.

தூத்­துக்­கு­டி மாவட்­டத்தில் துப்­பாக்­கிச்­சூட்டால் பாதிக்­கப்­பட்டு அரச மருத்­து­வ­ம­னையில் சிகிச்சை பெற்­று­வரும் மக்­களை, நடிகர் ரஜி­னி­காந்த் நேற்­று­ முன்தினம் நேரில் சந்தித்­துள்ளார். அப்­போது துப்­பாக்­கிச்­சூட்டால் பாதிக்­கப்­பட்ட இளைஞர் ஒருவர் ரஜி­னி­காந்தை பார்த்து யார் என்று கேட்­டுள்ளார். இந்த வீடியோ சமூ­க­வ­லை­த்த­ளங்­களில் வைர­லா­கி­யது.

இத­னைத்­தொ­டர்ந்து செய்­தி­யா­ளர்­களை சந்­தித்த நடிகர் ரஜி­னி­யிடம், செய்­தி­யாளர் ஒருவர் கேள்வி எழுப்­பினார். சமூ­க­வி­ரோ­தி­கள்தான் போராட்­டத்­திற்கு காரணம் என்று நீங்கள் கூறிய கருத்துக்கு எதிர்­க்கட்­சிகள் கண்­டனம் தெரி­வித்­துள்­ளன. அதை பற்றி உங்கள் கருத்து என்று ரஜி­னி­யிடம் கேட்­டுள்­ளார். இதனால் கோப­ம­டைந்த ரஜினி ஒரு­மையில் செய்தி­யா­ளரை பேசி­விட்டு வேறு ஏதும் கேள்­விகள் இரு­க்கி­ன்றதா? என்று கேட்டு­விட்டார். அதன்­பி­றகு ‘போராட்டம் போராட்டம் என்று சென்று கொண்­டி­ருந்­தி­ருந்தால் தமி­ழகம் சுடு­கா­டாக மாறி­விடும் என்றும் கூறினார்.

இந்­நி­லையில், சென்னைப் பத்­தி­ரி­கை­யாளர் சங்கம் இந்த சம்­ப­வத்­திற்கு கடும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளது. பொது­வெளிக்கு வரு­ப­வர்­க­ளிடம் கேள்­விகள் கேட்­பதும், அதனை மக்­க­ளுக்குத் தெரி­விப்­பதும் செய்­தி­யா­ளர்­களின் பணி என்றும் இதற்­காக மிரட்­டு­வது, ஒரு­மையில் பேசு­வது போன்ற அநா­க­ரிக செயல்­களை அனு­ம­திக்க முடி­யாது என்று சென்னை பத்­தி­ரி­கை­யாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இப்படிப் பேசியதற்காக நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Chennai Press Association Rajini apologize journalist unanimous manner

More Tamil News

Tamil News Group websites :