Categories: INDIA

ஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழா – மாடுகள் முட்டி 17 பேர் காயம்!

bullion ceremony near Jolarpet – 17 people injured injured

ஜோலார்பேட்டை அருகே நடந்த எருது விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 17 பேர் காயம் அடைந்தனர். ஜோலார்பேட்டை அடுத்த சந்தைகோடியூரில் எருது விடும் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. கோயில் ஊர்கவுண்டர் கே.சி.சக்திவேல் தலைமை தாங்கினார். விழா காலை 9 மணிக்கு தொடங்கியது. இதில் பருகூர், வாணியம்பாடி, ஆம்புர், ஆலங்காயம், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் சுற்றியுள்ள பகுதியிலிருந்து 150க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

இதில் குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடந்த குரிசிலாப்பட்டு அடுத்த முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த காளைக்கு முதல் பரிசாக ரூ.50,555ம், வக்கனம்பட்டியை சேர்ந்த காளைக்கு 2ம் பரிசாக ரூ.40,444ம், பெரியகரம் பகுதியைச் சேர்ந்த காளைக்கு 3ம் பரிசாக ரூ.30,333 உட்பட 25 பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், 26 முதல் 35 வரை சிறப்பு பரிசுகளும், முதல் 5 பரிசுகள் பெறும் காளைகளுக்கு ஜாக்பாட் பரிசு 5 ஆயிரமும் வழங்கப்பட்டது.

மேலும், இந்த விழாவில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமத்திலிருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர். இதில் மாடுகள் முட்டியதில் 17 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவத்துறை சார்பில் முதலுதவி செய்யப்பட்டது. மேலும், சப்இன்ஸ்பெக்டர் சிலம்பரசன், தீயணைப்புத்துறை அலுவலர் ர.பன்னீர்செல்வம் உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

More Tamil News

Tamil News Group websites :

Sakthi Raj

Share
Published by
Sakthi Raj
Tags: bullion ceremony near Jolarpet - 17 people injured injured

Recent Posts

கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யும் அபிராமி : சிறையில் அழுது புலம்பும் அவலம்

பிரியாணி மோகத்தால் தனது குடும்பத்தையே இழந்து தற்பொழுது சிறையில் வாடும்  அபிராமி தனது வாழ்வை நினைத்து புலம்பி கொண்டே இருக்கின்றது (Abirami Illegal activity  ) கள்ள…

16 mins ago

கொழும்பு – கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடல்!

கொழும்பு – கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி, ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை, தற்காலிகமாக மூடப்படுமென, போக்குவரத்துப் பொலிஸார் அறிவித்துள்ளனர். Colombo -Katunayaka Highway Closed…

54 mins ago

தோனியால் தலைநிமிர்ந்த வீரரின் பிறந்தநாள் கொண்டாட்டம்..!

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற பிறகு, அம்பதி ராயுடுவின் கிரிக்கெட் கிராஃப், அவரே எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்தது. தோனியின் வழிநடத்தல் காரணமாக, கடந்த…

56 mins ago

கள்ள காதலுக்கு துரோகம் செய்த கள்ள காதலி : கள்ள காதலன் செய்த கொடூர செயல்

உலகில் நல்ல காதலை விட கள்ள காதல் தான் அதிகரித்து வருகின்றது .ஆசை அறுபது நாள் ,மோகம் முப்பது நாள் என்பது இந்த காலத்திற்கு சரி வர…

1 hour ago

பெற்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு; சாரதிகள் அதிர்ச்சியில்

பெற்ரோல் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளதால் வாகன சாரதிகள் பெரும் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். (petrol price hiked today also one litter crossed rs86) பெற்ரோல்…

2 hours ago

தியாகி திலீபன் நினைவேந்தலை யாரும் தடுக்க முடியாது! யாழ். மாந­கர மேயர்!

எமது மக்­க­ளுக்­காக உயிர்­நீத்­த­வர்­களை நினைவு கூரு­வதைத் தடுக்­கும் உரிமை எவ­ருக்­கும் கிடை­யாது. நினைவு கூரு­வது என்­பது மக்­க­ளின் அடிப்­படை உரிமை என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ள யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை…

2 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.