Categories: MIDDLE EASTSaudiWORLD

சவுதியில் புனித ரமழானில் 1 மில்லியன் யாத்ரீகர்களுக்கு சேவையாற்றிய அரசுப் பேருந்துகள்!

1 million pilgrims Government buses served Saudi holy month Tamil news

புனித ரமழானில் 1 மில்லியன் யாத்ரீகர்களுக்கு சேவையாற்றிய சவுதி பொது போக்குவரத்து பஸ்கள்

புனித ரமழானில் புனித உம்ராவிற்காகவும் ஹரம் ஷரீஃபை தரிசிப்பதற்காகவும் ஏராளமான யாத்ரீகர்கள் சவுதி முழுவதிலுமிருந்தும் அண்டை நாடுகளிலிருந்தும் வாகனங்களில் வருகை தருவர். இவ்வருடம் புனித மக்கா நகர் மற்றும் ஹரம் ஷரீஃப் வளாகத்தை சுற்றியும் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பல்வேறு சிறப்பு பார்க்கிங் வசதிகள் மக்கா நகரின் வெளிப்புறப் பகுதிகளில் செய்யப்பட்டுள்ளன. இந்த சிறப்பு பார்க்கிங் பகுதிகளிலிருந்து யாத்ரீகர்களை அழைத்து வரவும், திரும்பக் கொண்டு சென்று விடவும் சவுதியின் பொது போக்குவரத்து கழக பஸ்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த வகையில் இதுவரை சுமார் 1 மில்லியன் பயணிகளுக்கு சேவை வழங்கப்பட்டுள்ளது.

தனியார் வாகனங்களுக்கும் தனியார் டேக்ஸிகளுக்கும் மக்கா நகரின் மத்தியில் இயங்க அனுமதியில்லை. எனவே, ஜித்தா வழியாக வரக்கூடியவர்களுக்கு ஜித்தா எக்ஸ்பிரஸ்வேயில் அமைந்துள்ள ஹஜ் பார்க்கிங், ரியாத் மற்றும் தம்மாமில் இருந்து வரக்கூடியவர்களுக்கு ஹாதா வ ஷராயா ஹைவேயிலும், நாட்டின் தென் பகுதியிலிருந்து வரக்கூடியவர்களுக்கு அல்லைத் பார்க்கிங் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறாக மொத்தம் 9 பிக்கப், டிராப் பாயிண்டுகளை சவுதி போக்குவரத்து துறை கையாளுகின்றது.

திரும்பவும் பார்க்கிங் பகுதிகளுக்கு செல்பவர்கள் ஹரமிலிருந்து அஜீஸியா பேருந்து நிலையத்திற்கு சென்றால் அங்கிருந்து மற்றொரு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டு உங்களுடைய வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள பார்க்கிங் பகுதிகளில் இறக்கிவிடப்படுவீர்கள். இந்தப் பணிகளுக்காக சுமார் 17,000 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் அதிநவீன ஜிபிஎஸ் கருவிகளும் பொருத்தப்பட்டு பஸ்களின் நடமாட்டமும் கண்காணிக்கப்படகிறது.

அனுமதிக்கப்படாத இடங்களிலும் நகரின் முக்கிய இடங்களிலும் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் எடுத்து செல்லப்பட்டு மக்கா நகருக்கு வெளியே கொண்டு செல்லப்படும். இவ்வாறு தூக்கிச் செல்லப்படும் வாகனங்கள் குறித்து அறிய http://mda-sa.com என்ற இணையதளத்திற்குள் சென்று உங்களுடைய கார் நம்பரை டைப் செய்தால் உங்களுடைய வாகனம் நிறுத்தப்பட்டுள்ள இடம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளலாம். அதேபோல் அதிவேகமாக செல்லும் பேருந்துகளும் பிடிக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்படும்

(1 million pilgrims Government buses served Saudi holy month Tamil news)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Swasthi R

Share
Published by
Swasthi R
Tags: 1 million pilgrims Government buses served Saudi holy month Tamil news

Recent Posts

எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணை பரிசோதனை வெற்றி!

எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.missile test succeeded intercept enemy missiles india tamil news ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம்…

21 mins ago

செம்மரம் வெட்ட வந்த 7 பேர் லாரியில் இருந்து குதித்து படுகாயம்..!

திருப்பதியில் செம்மரம் வெட்ட வந்த லாரியை போலீசார் விரட்டியதால், லாரியில் இருந்து குதித்த தமிழகத்தை சேர்ந்த 7 கூலித் தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.semmaram trafficking 7 people jump…

1 hour ago

பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ வெளியிட்ட நபர் கைது!

கேரளாவில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ பதிவு செய்த 45 வயதுடைய ஆணை காவல்துறையினர் கர்நாடகா மாநிலம் மங்களூரில் செப்டம்பர் 23 ஆம்…

2 hours ago

எங்கள் பிரதமர் திருடர்! – தேசியளவில் ட்ரெண்டான #ஹேஸ்டேக்!

நேற்று ட்விட்டரில், ”எங்கள் பிரதமர் திருடர்” என்று தேசிய அளவில் ட்ரெண்டானது, பரபரப்பை ஏற்படுத்தியது.prime minister - national trends #hashtag india tamil news ரஃபேல்…

3 hours ago

DIG நாலக சில்வாவை பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் – வாசுதேவ

பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவை பதவி நீக்கம் செய்து அதன் பின்னரே சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ…

7 hours ago

அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று யாழில் உண்ணாவிரத போராட்டம்

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்டுள்ளது. Today hunger strike support political prisoners…

7 hours ago

We use cookies on our site to enhance the news experience for our viewers, by clicking "Accept" you choose to allow us to save cookies on your device.