வாரணாசியில் மேம்பால விபத்து – அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு

0
606
section construction work Varanasi taken place people accident

section construction work Varanasi taken place people accident

இந்திய உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் கட்டுமான பணியிலிருந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்த வீழ்ந்த விபத்து குறித்து 7 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள இராணுவ கண்டோன்மன்ட் பகுதியில் வீதி மேம்பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், கடந்த வாரம் இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தது. இந்த இடிபாடுகளில் பாலத்தின் கீழ் பகுதியில் நின்றிருந்த பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி கொண்டன.

இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த விபத்து குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் குழு தங்கள் அறிக்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் நேற்று தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையின் அடிப்படையில், கட்டுமான நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜன் மிட்டால், முதன்மை திட்ட மேலாளர் தெவாரி, திட்ட மேலாளர் சுதன், துணை பொறியாளர் ராஜேஷ் சிங், உள்ளிட்ட 7 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் நிதி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

section construction work Varanasi taken place people accident

More Tamil News

Tamil News Group websites :