முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு

0
1170
jaffna Uni administration denied permission mullivaikal remember day

(jaffna Uni administration denied permission mullivaikal remember day)
தமிழினப் படுகொலையான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையில் பேரழுச்சியுடன் நடத்துவது குறித்து கலந்துரையாடும் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட போதும், அங்கு நடத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையில் பேரழுச்சியுடன் நடத்துவது தொடர்பில் கலந்துரையாடல் இன்று முற்பகல் 10.30 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்தது.

இதில் பல்கலைக்கழக அனைத்துப் பீடங்களின் மாணவர் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், தொழில்நுட்ப கல்லூரிகளின் மாணவ பிரதிநிதிகள் மற்றும் கோப்பாய் மற்றும் பலாலி ஆசிரியர் கலாசாலை மாணவ பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வார் என ஒன்றியம் குறிப்பிட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் கூட்டத்தை நடத்த நிர்வாகம் அனுமதி மறுத்ததால், அதனை திருநெல்வேலியிலுள்ள தனியார் விடுதியில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; jaffna Uni administration denied permission mullivaikal remember day