திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ரியல் மெட்ரிட்!

0
538
Real Madrid beat bayern munich news Tamil

(Real Madrid beat bayern munich news Tamil)

சம்பியன்ஸ் லீக் உதைப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டிக்கு ரியல் மெட்ரிட் அணி திரில் வெற்றியுடன் தகுதிபெற்றுள்ளது.

சம்பியன்ஸ் லீக் அரையிறுதியின் முதல் லீக் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற முன்னிலையுடன், இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் பெயர்ன் முனிச் அணியை, ரியல் மெட்ரிட் எதிர்கொண்டது.

போட்டியின் ஆரம்பத்தில் பெயர்ன் முனிச் அணி, ரியல் மெட்ரிட் அணிக்கு அதிர்சிக்கொடுத்தது. போட்டியின் 3வது நிமிடத்தில் பெயர்ன் அணியின் கிம்மிச் கோலடிக்க, ரியல் மெட்ரிட் 0-1 என பின்தங்கியது.

தொடர்ந்து 11வது நிமிடத்தில் பதிலடிகொடுத்த ரியல் மெட்ரிட் அணி 11வது நிமிடத்தில் கோலடித்து போட்டியை சமப்படுத்தியது. பென்ஷெமா குறித்த கோலை அடித்திருந்தார்.

பின்னர் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதற்பாதி 1-1 என சமனிலையில் முடிய, இரண்டாவது பாதியின் முதல் நிமிடத்தில் ரியல் மெட்ரிட் அணியின் பென்ஷெமா மீண்டும் கோலடித்து அணியின் முன்னிலையை 2-1 ஆக உயர்த்தினார்.

முன்னிலையை தகர்த்து போட்டியில் முன்னேறும் முயற்சியை மேற்கொண்ட பெயர்ன் முனிச் அணியின் ரொட்ரிகோஷ் 63வது நிமிடத்தில் கோலடித்து போட்டியை சமப்படுத்தினார். தொடர்ந்து இரண்டு அணிகளும் மேலதிக கோல்களை அடிக்காத நிலையில் போட்டி 2-2 என சமனிலையில் முடிவடைந்தது.

எவ்வாறாயினும் முதல் லீக் போட்டியில் 2-1 என வெற்றிபெற்றதால், ரியல் மெட்ரிட் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

<<Tamil News Group websites>>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here