president maithripala order director inspector police inquire
அரசாங்கத்தின் பிரதான நாளிதழிலும், பிரிதொரு பத்திரிகையிலும் வெளியான செய்தி தொடர்பில் உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறைமா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
‘சிவில் போராட்டங்களுக்கான பின்னணியை ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இடமளிக்க வேண்டாம்’ மற்றும் ‘நாட்டைப் பிளவுபடுத்தும் செயல்கள் தொடர்பாக பாதுகாப்புத் துறையினர் அவதானத்துடன் உள்ளனர்’ எனும் தலைப்புகளில் அமைந்த செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், வடக்கில் இடம்பெற்ற துக்க தின அனுட்டிப்பு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு, முப்படைகளின் தளபதிகளுக்கும், காவல்துறைமா அதிபருக்கும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரினால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இது யாரேனுமொரு நபர் அல்லது அமைப்பினால் உருவாக்கப்பட்டு ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இது குறித்து துரித விசாரணைகளை மேற்கொண்டு தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் காவல்துறைமா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது
president maithripala order director inspector police inquire.
More Tamil News
- யாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை
- வைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி
- முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி
- சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா? யாழ். நல்லூரில் ஆர்ப்பாட்டம்
- தமிழர் தாயகத்தில் கொதித்தெழுந்த மக்கள்; ஹற்றன் நஷனல் வங்கி அதிர்ச்சியில்
- ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை
- கரடி தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் வைத்தியசாலையில்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com