கிளிநொச்சி 155ம் கட்டைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் வடக்கு மாகாணத்திற்கான அலுவலகம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. Minister Mano Ganesan Office Open Kilinochi District Tamil News
இந்த அலுவலகத்தை அமைச்சர் மனோ கணேசன், மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரள உள்ளிட்டோர் இணைந்து திறந்து வைத்துள்ளனர்.
தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் நோக்குடன் இலங்கை முழுவதும் எட்டு அலுவலகங்களை அமைக்கும் நோக்கிலான அமைச்சின் திட்டத்தின், முதலாவது அலுவலகம் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், மாவை சேனாதிராஜா, சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், சரவணபவன், மற்றும் மாகாணசபை உறுப்பினர் வை.தவநாதன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வடமராட்சியில் மீனவரின் படகை தீ வைத்த விஷமிகள்
- வெளிநாட்டவர்களை குறிவைக்கின்றதா வாள்வெட்டுக்குழு; யாழில் அரங்கேறும் சம்பவங்கள்
- மசாஜ் நிலையத்தில் பெண்கள் செய்த வேலை; ஆண்கள் உட்பட 13 பேர் கைது
- அம்மாவிடம் கூறினால் கொன்றுவிடுவேன்; 13 வயது சிறுமி சித்தப்பாவினால் பாலியல் துஷ்பிரயோகம்
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- கிழக்கு மக்களுக்கு ரணிலிடமிருந்து இனிப்பான செய்தி!