கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதிக் காலப் பகுதியில் பிறந்த குழந்தைகளின் விவரத்தைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் பெற்றுக் கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது. (kilinochchi baby details cid )
இந்த விவரங்களை வழங்கவேண்டாம் என்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் அறிவுறுத்தியிருந்த நிலையில், அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத்தூவி இந்த விவரங்களைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் பெற்றுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.
ஒட்டுசுட்டானில் கிளைமோர் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தேடி வருகின்றனர்.
சந்தேகநபரின் மனைவி, மே மாதம் 25ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் குழந்தை பிரசவித்துள்ளதாகப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சகல வைத்தியசாலைகளிலும், மேற்படி காலப் பகுதிக்குள் குழந்தை பிரசவித்தவர்களின் விவரங்களை வழங்குமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கோரியிருந்தனர். தகவல்களை, மாவட்ட வைத்தியசாலைகளில் பெற்றுக் கொள்ள முடியாது என்றும், மாகாண பணிமனையுடன் தொடர்பு கொள்ளவேண்டும் என்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 35 ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்தும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் உத்தியோகபற்றற்ற முறையில் தமக்குத் தேவையான தகவல்களைத் திரட்டியுள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அடுத்தவாரம் மஹிந்தவின் முகத்திரையை கிழிக்க உள்ள அநுர : சூடு பிடிக்கும் தெற்கு அரசியல்
- புலித் தலைவர்களும், புலிகளின் விமானிகளும் தப்பிச் சென்றுள்ளனர் : பேட்டியில் கோத்தபாய தெரிவிப்பு
- பாதாள உலகுக்கு சிம்ம சொப்பன அதிகாரியை கொலை செய்தால் 50 லட்சம் பணம் – டுபாயிலிருந்து பேரம்
- அலுகோசு பதவிக்கு கோத்தபாயவே சிறந்தவர்! பிரதி அமைச்சர் கேலிப்பேச்சு!
- கொள்ளுப்பிட்டி – தெஹிவளை கடல்பரப்பில் புதிய கடற்கரைப் பூங்கா
- முஸ்லிம்கள் மக்கள் வாக்களிப்பார்கள், பொது பலசேனாவின் ஆதரவாளர் நானில்லை – கோட்டாபய நம்பிக்கை
- அபாயா அணிந்து முகத்தை மூடுவதால் முஸ்லிம் மாணவிகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர் – தம்பர அமில தேரர் கவலை
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:kilinochchi baby details cid ,kilinochchi baby details cid ,kilinochchi baby details cid ,