சென்னையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் கருணாநிதிக்கு திமுக தொண்டர்களே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது பெரும் சர்ச்சைக்குரியதாகி உள்ளது.india tamilnews pre-arrangement tear-tribute poster DMK’s volunteer
அத்துடன் அந்த போஸ்டர்கள் அனைத்தும் இணையதளத்தில் வைரலாகியும் வருகிறது. திமுக தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவரது உடல்நலன் குறித்து அறிந்து கொளள் தினந்தோறும் நாட்டின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மருத்துவமனை வந்து செல்கின்றனர்.
பிரார்த்தனை :
அதேபோல தமிழகத்தின் திமுக தொண்டர்களும் மருத்துவமனை வாயிலில் கூடி வருகின்றனர். அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என திமுக தொண்டர்கள் இல்லாமல் பொதுமக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சீராகி வருகிறது :
நேற்று முன்தினம் கருணாநிதி உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தமிழகமே பரபரப்பானது.
ஆனால் கருணாநிதியின் உடல்நலன் தற்போது சீராகி வருவதாக காவேரி மருத்துவமனையும் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் அவ்வப்போது மக்களிடம் தெரிவித்து வருகின்றனர்.
தொண்டர்களின் போஸ்டர் :
இந்நிலையில், கருணாநிதி சிகிச்சையில் இருக்கும்போதே, அவர் இறந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்களை அடித்து ஒட்டியதே திமுக தொண்டர்கள்தான் என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாக உள்ளது.
வைரலாகும் படங்கள் :
கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே அவருக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த சம்பவம் பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- லாரன்ஸின் சவாலை ஏற்றுக்கொண்ட ஸ்ரீ ரெட்டி செய்யும் வேலை (காணொளி)
- உனக்கு அவ்ளோ திமிரா? : வாராகி – உனக்கே இருக்கு… அப்போ எனக்கு? – ஸ்ரீ ரெட்டி
- கருணாநிதி உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கைது
- என்னை திருப்திபடுத்தினால் அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன் – ஸ்ரீ ரெட்டிக்கு லாரன்ஸ் சவால்
- தந்தையின் இறுதிச்சடங்கை நடத்திய 4 பெண்களை ஊரை விட்டு ஒதுக்கிய சாதி பஞ்சாயத்து
- கலைஞரை பார்க்க மருத்துவமனைக்கு திரளும் பிரபல திரைப்பட கலைஞர்கள்
- இ.க.க மூத்த தலைவர் தா.பாண்டியனை நேரில் நலம் விசாரித்த ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ்