12 வது குழந்தை தொடர்பில் உலக பணக்காரரான எலான் மஸ்க் வெளியிட்ட விளக்கம்!

0
86

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்  தனது 12 வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் என்றும் அதை அவர் ரகசியமாக வைத்துள்ளார் என்றும் அண்மையில் வெளியான ப்ளூம்பெர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

காதல் விவகாரங்களில் பலருடன் தொடர்பு வைத்துள்ள எலான் மஸ்க்கிற்கு கடந்த 5 வருடங்களில் மட்டும் 6 குழந்தைகள் பிறந்துள்ளனர்.

தற்போது பிறந்துள்ள 12 வது குழந்தை மஸ்க் உருவாக்கிய நிறுவனமான நியூரோடெக்னாலஜி துறையில் இயங்கிவரும் நியூராலின்க் நிறுவனத்தின் மேனேஜர்களில் ஒருவரான ஷிவோன் சிலிஸ் பெற்றேடுத்துள்ளார்.  

12 வது குழந்தை தொடர்பில் உலக பணக்காரரான எலான் மஸ்க் வெளியிட்ட விளக்கம்! | Explanation By Elon Musk About The 12Th Child

ஷிவோன் சிலிஸுக்கு பிறந்துள்ள எலான் மஸ்க்கின் 12 வது குழந்தை இந்த வருட ஆரம்பத்தில் பிறந்துள்ளது என்றும் குழந்தையின் பிறப்பு, பாலினம் மற்றும் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட புளூம்பெர்கின் அறிக்கைக்கு எலான் மஸ்க் ரியாக்ட் செய்துள்ளார்.

அதாவது தனக்கு 12 வது குழந்தை பிறந்தது உண்மைதான் என உறுதிப்படுத்தியுள்ள எலான் மஸ்க் அதை ரகசியமாக வைத்தததாக கூறுவது சரியில்லை என்று தெரிவித்துள்ளார்.

குழந்தை பிறந்தது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரியும். ஊடகத்திடம் அதை வெளிச்சம்போட்டு சொல்வில்லையே தவிர இதில் ரகசியம் என்று எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.