
சவுதி அரேபியாவுக்கான கனேடிய தூதர் நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Canadians Saudi ordered leave country tamil news
சவுதி அரேபியாவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கனடா கேள்வி எழுப்பிய நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பாக கனடாவின் வெளிவிவகார அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சவுதி அரேபிய அரசாங்கம் காரணமின்றி பொதுமக்களை கைது செய்வதும், பெண்களின் உரிமைக்காக போராடியவர்களை கைது செய்து மிரட்டுவதும் ஏற்றுக் கொள்ள முடியாதது.
குறித்த விவகாரம் தொடர்பில் கனடா அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது. அத்துடன், சவுதி அரேபிய அரசாங்கம் உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும், இதுபோன்ற மனித உரிமைகள் போராளிகளை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் கனடாவுடனான அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் முடக்கவுள்ளதாகவும், இனி புதிதாக எந்த வர்த்தக உறவும் கனடாவுடன் இல்லை எனவும் சவுதி அரேபியா அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், சவுதி அரேபியாவின் உள் விவகாரங்களில் கனடா தலையிடுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன், சவுதி அரேபியாவுக்கான கனேடிய தூதரை 24 மணி நேரத்தில் நாட்டைவிட்டே வெளியேறவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
tags :- Canadians Saudi ordered leave country tamil news
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பிரான்ஸில் விலையேற்றம் காணும் மின்சாரம், எரிவாயு!
- பிரான்ஸிலுள்ள இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!
- டொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்!
- நான் தான் இப்போ கேப்டன் நான் சொல்றத கேளுங்க : பாலாஜியிடம் கெத்து காட்டும் ஐஸ்