“கர்மா வட்டியுடன் வந்து சேரும்”: தனுஷை சாடிய நயன்தாரா

0
26

நயன்தாராவின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படம் கடந்த 18 ஆம் திகதி அவரது பிறந்தநாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படத்தின் ட்ரெய்லரில் நானும் ரவுடி தான் திரைப்படத்தின் சில காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

அந்த வீடியோவுக்கு அப் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் ரூபாய் 10 கோடி இழப்பீடு கோரியிருந்தார். இந்நிலையில் நானும் ரவுடி தான் திரைப்பட காட்சிகள் மற்றும் பாடல்களை ஆவணப்படத்தில் இணைத்துக்கொள்ள நடிகர் தனுஷ் அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தியதாக மூன்று பக்கங்கள் கொண்ட கடிதத்தை நயன்தாரா வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நயன்தாராவுக்கு எதிராக வொண்டர் பார்ஸ் நிறுவனம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

உயர் நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்து குற்றம் சாட்டப்பட்ட நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் இதற்கு பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் “பொய்யின் மூலமாக அடுத்தவர் வாழ்க்கையை அழித்தால் அது வட்டியுடன் உங்களை வந்தடையும்” என அவரது இன்ஸ்டா பக்கத்தில் மறைமகமாக தனுஷை சாடியுள்ளார் நயன்தாரா.