அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதும் அமெரிக்க ராணுவத்திலிருந்து திருநங்கைகள் வெளியேற்றப்படும் உத்தரவில் கையெழுத்திடப்போவதாக தகவல்கள் வெளியாகி பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிப்பெற்ற நிலையில் பதவியேற்பு ஜனவரிமாதம் 20ம் திகதி நடைப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க ராணுவத்திலிருந்து திருநங்கைகளை வெளியேற்றும் முக்கிய உத்தரவில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை கடந்த முறை அதிபராக இருந்த போதும் திருநங்கைகள் இராணுவத்தில் சேர்வதை தடுத்தார். இருப்பினும் ஏற்கனவே இராணுவத்தில் பணியாற்றி வந்த 15000 திருநங்கைகளை தொடர்ந்து பணியாற்ற அனுமதித்தார்.
இந்நிலையில் தற்பொழுது மீண்டும் திருநங்கைகள் புதிதாக பணியில் பணியாற்றுவதை தடுப்பதுடன் ஏற்கனவே பணியாற்றி வரும் பணியாளர்களையும் மருத்துவப்பரிசோதனை மற்றும் உடற்தகுதி அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.
அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகள் பெண்கள் பணியமர்த்தப்பட்டால் அமெரிக்க ராணுவமானது சீர்குலையும் என டிரம்ப் வாதிட்டதாக கூறப்படுகின்றது.
திருநங்கைகளுக்கு இராணுவத்தில் மட்டுமல்லாது அவர்களுக்கு கல்வி, விளையாட்டு, சுகாதாரம் போன்றவைகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பெரும்பாலான நாடுகள் திருநங்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கி உள்ள நிலையில் அமெரிக்கா போன்ற உலகின் முதல் வல்லரசு நாட்டில் திருநங்கைகளுக்கான உரிமைகள் மறுக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.