google map ஆல் பறிபோன மூன்று உயிர்கள்

0
41

கூகுள் மெப்பின் உதவியுடன் இந்தியாவின் பரேலியிலிருந்து பதாவுன் பகுதியை நோக்கிப் பயணித்த கார் ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் மூவர் உயிரிழந்ததாக சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. சம்பவத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மூவரே உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகப் பாலத்தின் முன் பகுதி ஆற்றில் இடிந்து விழுந்ததாகவும், பாலத்தின் சமீபத்திய நிலை GPS-ல் மேம்படுத்தல் (அப்டேட்) செய்யப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் கார் பாலத்தின் மீது பயணித்துக் கொண்டிருந்த போது பாலத்தில் கவிழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.