வவுனியாவில் வான்பாயும் 120 இற்கும் மேற்பட்ட குளங்கள்

0
42

வவுனியாவில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக 120 இற்கும் மேற்ப்பட்ட குளங்கள் வான் பாய்வதுடன் 3 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த சில நாட்களாக மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் நிறைந்து காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.

வவுனியாவில் வான்பாயும் 120 இற்கும் மேற்பட்ட குளங்கள் | More Than 120 Ponds Are Draining In Vavuniya

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தின் 120 இற்கும் மேற்ப்பட்ட குளங்கள் தனது முழுக்கொள்ளளவை எட்டி மேலதிக நீர் வெளியேறி வருவதுடன், அநேகமான குளங்களில் 90 சதவீதமான அளவு நீர் நிறைந்துள்ளது.

இதுவரை செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள இராமயன்குளம், அருவித்தோட்டம் – நாகராயன்குளம் மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மடத்துவிளாங்குளம் ஆகியவற்றின் அணைக்கட்டுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவற்றைச் சீர்செய்யும் பணிகளில் அதிகாரிகளின் ஆலோசனைகளுடன் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.