விடுதலைப் புலிகளின் தலைவருக்கு அஞ்சலி செலுத்திய எம்.பி அர்ச்சுனா

0
36

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு யாழ் மாவட்ட சுயேட்சை எம்.பி அர்ச்சுனா ராமநாதன் அஞ்சலி செலுத்தி காணொளி வெளியிட்டுள்ளார்.

காணொளியில் தனது தந்தை இலங்கை அரசாங்கத்தின் முன்னாள் பொலிஸ் அதிகாரி எனவும் அவர் 1987ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் பொலிஸ் பிரிவில் இணைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாங்கள் இனவாதிகள் அல்ல. நாங்கள் இலங்கைத் தமிழர்கள். இந்த மாதம் போரின்போது உயிரிழந்த உயிர்களை நினைவு கூர்கிறோம்.

நான் சிங்கள மக்களுக்கு எதிரானவன் அல்ல, எங்களைக் கொன்ற சிங்கள அரசுக்கு மட்டுமே எதிரானவன் என்று என் கடவுள் பிரபாகரன் கூறியுள்ளார் என்றும் எம்.பி அர்ச்சுனா கூறியுள்ளார்.