எதிர்வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவது இல்லை; விக்னேஸ்வரன் அணி தீர்மானம்

0
47

எதிர்வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதால் எந்த பலனும் கிடைக்காது இனிமேலும் கூட்டணியாகவே தேர்தலை சந்திக்க வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் கட்சியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரனுடன் நடத்திய கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தனித்துப் போட்டியிட்டால் பலன் இல்லை என்றும் இனிமேலாவது கூட்டணியாகவே தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் அனைத்து வேட்பாளர்களும் தெரிவித்தனர்.

விக்னேஸ்வரனும் ஏற்றுக்கொண்டார். க.வி.விக்னேஸ்வரன் மதுபானசாலைக்கு அனுமதி பெற உதவிய விவகாரமே கடந்த தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டமைப்பு வெற்றி பெறாததற்கு காரணம் என அனைத்து வேட்பாளர்களும் தெரிவித்தனர்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் மதுபான பார்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக எதிர்ப்பு கிளம்பியதாக வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விக்னேஸ்வரன் வாழ்வாதாரமாகவே செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானதாகவும் தாம் வாழ்வாதாரமாக பட்டிமன்றத்திற்கு சிபாரிசு கடிதம் வழங்கியதாக யாரிடமும் கூறவில்லை எனவும் ஊடகங்கள் திரித்து வெளியிட்டன எனவும் தெரிவித்துள்ளார்.