பயங்கரமான ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கிய ஜோ பைடன்!

0
66

நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி வழங்கியுள்ளார்.

ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா 10,000 வீரர்களை அனுப்பியுள்ள நிலையில் குறித்த சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டுமென்றால் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஏவுகணைகளை பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

பயங்கரமான ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கிய ஜோ பைடன்! | Joe Biden Gave Permission Ukraine To Use Missiles

இதைத்தொடர்ந்து வரும் நாட்களில் உக்ரைன் ரஷ்யாவுக்கு எதிராக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தலாம் எனத் தெரிகிறது.  இது தொடர்பாக வெள்ளை மாளிகை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

இந்த மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். அப்போது உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவித்துள்ளார். ஜோ பைடனின் ஜனாதிபதி ஆட்சிக்காலம் ஜனவர் 20-ம் திகதி வரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.