தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் தெரிவு குறித்து நபரொருவர் முகநூலில் வெளியிட்ட பதிவு!

0
60

இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம், வன்னித் தேர்தல் தொகுதியின் வவுனியா மாவட்டத்தில் நின்று போட்டியிட்டு தோல்வியுற்ற, வைத்தியர் ப.சத்தியலிங்கத்திற்கு தமிழரசு கட்சியின் அரசியற்குழுவின் முடிவுக்கு அமைய வழங்கப்பட்டுள்ளது என அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்திருக்கிறார்.

இவ்வாறான நிலையில் தமிழரசு கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசியப் பட்டியல் வேட்பாளர் ப.சத்தியலிங்கத்திற்கு எனது வாழ்த்துக்களை பதிவு செய்வதாக சிவனடியான் சுவாமி சங்கரானந்தா முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் முகநூலில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் தெரிவு குறித்து நபரொருவர் முகநூலில் வெளியிட்ட பதிவு! | Tamil Arasu Kachchi Sumanthiran P Sathiyalingam

நான் சென்ற பதிவில் பரிந்துரைத்ததன் படி, வடக்குக் கிழக்கின் 8 மாவட்டங்களில் தமிழ் தேசிய பிரதிநிதித்துவத்தை இழந்து நிற்கும் வவுனியா மாவட்டத்திற்குஅந்த தேசிய பட்டியல் கிடைத்துள்ளது என்பதில் திருப்தியே என்றாலும் அது அந்த வவுனியா மாவட்டத்தில் உள்ள தகுதி உள்ள பெண் ஒருவருக்கு வழங்கபட்டு இருந்தால் இந்த சிவனடியான் இன்னும் பூரண திருப்தியைக் கொண்டு இருப்பேன்.

உலகு எல்லாம் பரந்து வாழும் ஈழத்து தமிழ் உறவுகளுக்கு தெரிவித்து எனது வருத்தத்தை உங்களுடன் பகிர்ந்து இந்த பதிவை தொடர்கின்றேன். சிங்கள பிரதேசங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட தகுதி உள்ள பெண்களை அதுவும் அதில் 3 தமிழ் பெண்களை சிங்கள மக்களால் நாடாளுமன்றம் அனுப்ப முடியும் என்கின்ற போது சுரேக்காவையும், கிருஷ்ணவேணியையும் காடுகள் மலைகள் மேடுகள் பள்ளங்கள் எனப் பல இடங்களிலும் தேடி வீட்டுக்குள் கொண்டு வந்து வேட்பாளராக நிறுத்திய புத்திஜீவி எம்.ஏ. சுமந்திரனால் வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரு தகுதி உள்ள பெண்ணை தேடிக் கண்டு பிடித்து தேசியப்பட்டியலால் நாடாளுமன்றம் அனுப்ப முடியவில்லை என்பது பெரும் அதிர்ச்சியாகவே இருக்கின்றது.

தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் தெரிவு குறித்து நபரொருவர் முகநூலில் வெளியிட்ட பதிவு! | Tamil Arasu Kachchi Sumanthiran P Sathiyalingam

இந்த தேசியப் பட்டியல் விவகாரம் என்பது தமிழரசு கட்சியின் உள்வீட்டு விவகாரத்தில் ஒன்று என்பதனாலும் தமிழ் தேசிய கட்சிகளில் ஒன்றான தமிழரசு கட்சியை விமர்சிக்காமல் கடப்பதே தற்போதைய காலத்தின் தேவை என்பதனாலும் இவ்விடயம் சம்பந்தமாக விமர்சனங்களை தொடரமால் நான் கடந்து செல்லுவதோடு இனிமேல் எதையும் மாற்ற முடியாது என்பதனால் தமிழரசு கட்சி மீது இது சம்பந்தமாக விமர்சனங்கள் மேலும் வைக்காமல் தாண்டி செல்ல அனைத்து உறவுகளையும் வேண்டிக்கொள்கிறேன்.

மழை நின்ற பின்பும் தொடரும் தூறல் போல எம்.ஏ.சுமந்திரன் மக்களால் நிராகரிக்கப்பட்டும் அவரது இவ்வாறான குழப்பகரமான அரசியல் தமிழரசு கட்சிக்குள் தற்போது தொடர்ந்தாலும் கூட அது இனிமேலும் அதிக காலம் நீடிக்காது என்பதை நம்பிக்கையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்தோடு ஊழலுக்கு எதிரான மாற்றம் ஒன்றுக்கான நாட்டு மக்களது பேரெழுச்சியினால் திடீரென அதிரடியாக வெற்றி பெற்ற ஜேவிபி கட்சி நேர்த்தியான நடவடிக்கைகளை திட்டமிட்டு பெளத்த சிந்தனைப் படி செயல்படுத்தும் போது இவ்வாறன நிலைமை இனிமேல் தமிழரசு கட்சிக்குள் மட்டும் அல்ல தமிழ் தேசிய கட்சிகளுக்குள்ளும் வராதவாறு திட்டமிட்டு கணித்து செயற்படுத்துவதன் மூலம் எதிர்கால நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என்பதை சுட்டிக் காட்டுகின்றேன்.

மேலும் தமிழ் தேசிய உயரிய இலட்சியத்துடன் உங்களுக்கு வாக்களித்து உங்களை தெரிவு செய்த தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் நன்றிக் கடனாக வடக்கு கிழக்கின் 8 மாவட்டங்களிலும், மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்ட தமிழரசு கட்சியின் 8  கெளரவப் பிரதிநிதிகளும், மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினதும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினதும், கெளரவப் பிரதிநிதிகளுமான பத்துப் பிரதிநிதிகளாகிய நீங்கள் வெவ்வேறு கட்சிகளாக செயற்ப்பட்டாலும் கூட சபாநாயகர் முன்னிலையில் செய்யப்பட இருக்கும் சத்தியப் பிரமாணத்தின் பின்னர் தமிழ் தேசிய நிலைப்பாட்டோடு உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்காக தமிழ் தேசிய கொள்கை ரீதியில் நாடாளுமன்ற குழு அமைத்து கலந்துரையாடல்களை நேரடியாக சந்திக்க முடியாவிட்டாலும் zoom மூலம் ஏற்படுத்தி ஒருமித்த கருத்துக்களோடு நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களுக்கு சென்று நாடாளுமன்றத்தில் நீங்கள் அனைவரும் ஒருமித்த குரலாக ஒலிக்கும் போது மட்டுமே சிதைவடைந்து இருக்கும் தமிழ் தேசியத்தை வடக்கு கிழக்கில் மீட்டு தூக்கி எழுப்ப உங்களால் முடியும் என்பதை, தமிழ் தேசிய கெளரவப் பிரதிநிதிகளாகிய உங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

எனது இந்த கருத்தினை உங்களுக்கு வாக்களித்து வெற்று பெற வைத்த தமிழ் மக்களின் நன்மை கருதி கரிசனையுடன் கவனத்தில் எடுத்து அதனை நடைமுறைப்படுத்துவீர்கள் என நம்புவதாக சுவாமி சங்கரானந்தா முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.