மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக தமிழ் பெண் நியமனம்

0
51

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இந்த புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (18) காலை நடைபெற்றது.

நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அனுரவின் தேசிய மக்கள் சக்தி பெரும் வெற்றி பெற்ற நிலையில் புதிய அமைச்சர்கள் நியமனம் இன்று இடம்பெற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.