டிரம்ப் தலைமையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்படும்: ஜெலன்ஸ்கி நம்பிக்கை

0
83

ரஷ்யா – உக்ரெய்னுக்கு இடையிலான போர் சுமார் இரண்டு வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வருகின்றது.அமைதி பேச்சு வார்த்தைகள் பல நடத்தியும் போர் நின்றாடில்லை.

அமெரிக்கா, ஜெர்மன் போன்ற நாடுகளிடம் தொடர்ந்தும் உக்ரெய்ன் உதவிகளை கேட்டு வருகிறது. இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றியடைந்தார்.

இது தொடர்பில், உக்ரெய்ன் ஜனாதிபதி ஜெலன்ஸி கூறுகையில்,

“எங்களது நிலை குறித்து ட்ரம்ப் கேட்டறிந்து கொண்டார். ட்ரம்பின் தலைமையின் கீழ் நிச்சயம் இப் போர் முடிவுக்கு வரும் என்றார். மேலும் ட்ரம்பின் நிர்வாகம் மற்றும் விரைவான தீர்வு ஆகியவற்றை மேற்கோள்காட்டி ஜெலன்ஸ்கி தனது நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

அமைதியே எங்களுக்கு முக்கியம். போர் முடிவுக்கு கொண்டு வரப்படும். ஆனால் திகதியை சரியாக கூற முடியாது. வெள்ளை மாளிகையை தலைமையேற்று நடத்தவுள்ள நிர்வாகம் இப்போரை முடிவுக்குக் கொண்டு வரும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.